நியூ[ஸ்]மார்ட்

aniruddha

சர்வ தேச சட்ட ஆணையத்தின் தலைமையகம் ஜெனிவாவில் இருக்கிறது. இதன் 34 உறுப்பினர்களுகான தேர்தல் ஐ நா பொதுச்சபையில் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடைபெற்றது  இதில் ஆசிய பசிபிக் பிரிவில் போட்டியிட்ட 7 உறுப்பினர்களில் இந்தியாவைச் சேர்ந்த அனிருத்தா ராஜ்புத் அதிகபட்சமாக 160 வாக்குகளைப் பெற்று முதலிடம்  வகித்தார்  33 வயதாகும் இவர் புனே சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பு முடித்து லண்டன் ஸ்கூல் ஆப் எகானிமிக்ஸ் கல்வி நிறுவனத்தில் சட்ட மேல் படிப்பு பயின்றவர்.  பின்னர் சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தில் சட்டப் பிரிவில் முனைவர் பட்டம் முடித்தார். இதன் பிறகு உச்ச நீதிமன்ற வழக்கறிஞராகப் பணிப்புரிந்து வந்தார்.capsule-micro-apartments-2

கேப்ஸ்யூல் தங்கும் விடுதிகள் ஜப்பானில் மிகவும் புகழ்பெற்று வருகின்றன. வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்ப முடியாதவர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டமுடியாதவர்கல் அதிகம் செலவு செய்ய முடியாதவர்கள் அருகிலிருக்கும் கேப்ஸ்யூல் விடுதிகளில் தங்கிக்கொள்கிறார்கள். சிறு பெட்டி அளவுக்கு உள்ள இந்த அறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு படுக்கை தொலைக்காட்சிப்பெட்டி இன்டர் நெட் இணைப்பு கண்ணாடி கடிகாரம் பை வைக்க சிறிய அலமாரி குளிர்சாதன வசதி போன்றவை உள்ளன.  ஒருவர் மட்டுமே தங்க முடியும். இங்கே புகைப்பிடிக்கவோ சாப்பிடவோ கூடாது. குளியலறைகளும் கழிவறைகளும் தனியாக இருக்கின்றன. சில இடங்களில் பெண்களுக்கென்ரு தனியாக கேப்ஸ்யூல் அறைகள் உள்ளன.  உணவுகளும் பானங்களும் விற்பனை செய்யப்படுகின்றன. 50 முதல் 700 கேப்ஸ்யூல் அறைகள் கொண்ட விடுதிகள் ஜப்பானில் இருக்கின்றன.dc

சென்ற வாரம் மத்திய லடாக்கில் உள்ள டெம்சொக் கிராமப்பகுதியில் இந்திய ராணுவ பொறியாளர்கள் நீர்ப்பாசனக் குழாய்கள் நடும் பணியை மேற்கொண்ட போது எல்லை கோட்டுப் பகுதிக்கு வந்த சீன ராணுவத்தினர் கட்டுமானப் பணிக்கு இருதரப்பு ஒப்புதல் பெற வேண்டும் என்று அவர்களைத் தடுத்தனர். அப்பகுதிக்கு விரைந்த இந்தியப் பாதுகாப்புப் படையினர் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் வராதபடி 70 ராணுவ வீரர்களை அரண் போல் நிறுத்தினர். பின்னர் ராணுவ பொறியாளர்கள் வெற்றிகரமாகப் பணியை முடித்தனர்.1477918486-1668

அகில இந்திய நீச்சல் கழகம் சார்பில் தெலுங்கானா மானிலம் செகந்திராபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மாஸ்டர் சாம்பியன் நீச்சல் போட்டிகளில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 67 வயதாகும் சாந்தாராம் என்பவர். 100 மீட்டர் பட்டர்ஃபிளை பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார்.  மானில அளவிலான போட்டிகளில் பங்கேற்று 9 தங்கம் 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ள சாந்தாராம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்தில் நடைபெற உள்ள சர்வதேசப் போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்றுள்ளார்.hqdefault

அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலத்தில் முதல் முறையாக விளக்கேற்றி தீபாவளியைக் கொண்டாடினர். இதில் இந்திய வம்சாவளி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். அதே போல ஐக்கிய நாடுகள் சபையில் முதல்முறையாக தீபாவளி கொண்டாடப்பட்டது. நியூயார்க் நகரில் உள்ள ஐ நா தலைமையகக் கட்டடம் கண்ணைப் பறிக்கும் வகையில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.bodi-city

மதுரை போடி நாயக்கனூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கல்  ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு வளர்த்து சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவி வருகிறார்கள். இயற்கை எழில் மிக்க சோலைவனத்திற்குள் நுழைவது போல் பள்ளி வளாகம் அமைந்துள்ளது. அதனைச் சுற்றியுள்ள பகுதி முழுவதும் புங்கை வேம்பு ஆலமரம் தேக்கு மரங்களை மாணவர்கள் வளர்க்கிறார்கள். பாசன வசதியில்லாமல் மழையினை நம்பி மானாவாரி விவசாயம் நடந்து வரும் பகுதியில் ஆரம்பத்தில் மரங்களுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. ஆர்வத்தோடு மாணவர்கள் முயற்சித்து வெற்றி கண்டு தற்போது தூதுவளை துளசி போன்ற மூலிகைச் செடிகளையும் வளர்க்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s