ஆஹா ஆலயம்

hindu

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையிலிருந்து 9 கிமீ தூரத்தில் அணைப்பட்டி கிராமத்தில் அருள்புரிகிறார் வீர ஆஞ்சனேயர். இவர் வலது கையில் சிரஞ்சீவி மலையை தாங்கியபடி கம்பீரமாக 7 அடி உயரத்தில் அருள் புரிகிறார். இவரது வாலில் நவக்கிரகங்கள் ஒன்பதும் அடக்கம் என்பது ஐதீகம். சுயம்புவாய் அருள் தரும் ஆஞ்சனேயர் ராணி மங்கம்மாள் கனவில் தோன்றி கூறிய உத்தரவின்படி தற்போதைய கோயில் உள்ளது.evening-t

திண்டுக்கல் அருகே தாடிக்கொம்பிலுள்ள சௌந்தரராஜப் பெருமாள் கோயிலிலுள்ள தன்வந்திரி பெருமாள் சன்னதியில் பிரதி அமாவாசை தோறும் சகல வியாதிகளைப் போக்கும் லேகியம் தைலம் வழங்கப்படுகிறது. இங்குள்ள சௌந்தரவல்லித் தாயார் சன்னதியின் தூண்களில் பல சிற்பங்கள் உள்ளன. சங்கீதம் பாடும் தூண்களும் உள்ளன. பரிவார மூர்த்திகளின் சன்னதியில் தசாவதார மூல பிம்பங்கள் உள்ளன. இதை வேறெங்கும் காண முடியாது. சரஸ்வதியின் குருவான ஹயக்ரீவர் இங்கு எழுந்தருளியுள்ளது மற்றொரு சிறப்பு.tami

திருச்சியில் உள்ள லால்குடிக்கு அருகில் மணக்கால் என்னும் ஊரில் ஸ்ரீ நங்கையார் அம்மன் கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெறும் நவராத்திரியின் 10 நாளில் தயிரிப்பாவாடை என்னும் வழிபாடு மிகப் பிரசித்தம். அப்போது மண்டபத்தில் தயிர் சாதத்தைத் தயாரித்து மிகப்பெரிய துணியில் கொட்டி  பரப்பி வைப்பார்கள். அதை அம்மனுக்கு நைவேத்யம் செய்து பக்தர்களுக்கு பிரசாதத்தை வழங்குவார்கள். இப்பிரசாத்ததை சாப்பிட்டு அம்மனை வேண்டிக்கொண்டால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.vij

பெங்களூருவில் உள்ள இன்றைய பரபரப்பான விஜய நகர் 60 ஆண்டுகளுக்கு முன்பு அடர்ந்த காடாக இருந்தது. அதன் நடுவே குன்றின் மீது அமர்ந்திருந்த ஒரு குரங்கு தெய்வீக சக்தி நிறைந்தது என்ற நம்பிக்கையில் பலரும் அதற்குப் படையலிட்டு வணங்கி வந்தனர். சில காலங்கள் கழித்து அந்தக் குரங்கு இறந்தது. குன்றும் அழிந்தது. மாருதியைப் போல சிலாசாசனம் செய்து பிரதிஷ்டை செய்யப்பட்டதே இன்றைய மாருதி ஆலயம். இந்த ஆலயம் மிகுந்த சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது.varapali-03

இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ளது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம். சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் வைகாசி பொங்கல் விழா நடைபெறும்போது கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம் நடக்கிறது. கண்ணகியம்மன் திருவருளால் நடைபெறும் இந்த அற்புதம் காண்பவரை மெய்சிலிர்க்க வைக்கும்/.amaaa

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ரயில்  நிலையத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் உள்ளது காமாட்சி அம்மன் ஆலயம். இங்கு அருள்புரியும்  காமாட்சி அம்மனுக்கு அர்ச்சகர் அபிஷேகம் செய்வதுபோல் கருவறைக்குள் சென்று சிறுவர்கள் அபிஷேகம் செய்யலாம்.  ஆனி மாத உத்திர நாளில் ஒரு வயது முதல் ஐந்து வயது வரையுள்ள குழந்தைகளைக் கொண்டு அர்ச்சகர் மேற்பார்வையில் அம்பாளுக்கு அபிஷேகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். இதைப்போலவே ஐந்து முதல் பதிமூன்று வயது வரை உள்ள சிறுவர் சிறுமிகள் தியான மண்டபத்தில் அருள் புரியும் உற்சவ மூர்த்திகளுக்கு குங்குமத்தினால் அர்ச்சனை செய்கிறார்கள். இவ்வழிபாட்டினால் குழந்தைகளின் கல்வித்திறன் மேம்படும் என்பது நம்பிக்கை.

 

Advertisements

2 thoughts on “ஆஹா ஆலயம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s