வித்தியாசமான கேரள ஆலயங்கள்

padmanabatemple

திருவனந்தபுரம் அனந்த பத்ம நாப ஸ்வாமிக்கு தினமும் உப்பில் ஊற வைத்த மாங்காயை தங்கச் சிரட்டையில் வைத்து நைவேத்யம் செய்கிறார்கள்.2

திருவனந்தபுரம் ராஜாவின் கோட்டைக்கு வெளியே இருக்கும் பிள்ளையார் கோயிலின் மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது. இவரைப் பழவங்காடிப் பிள்ளையார் என அழைக்கிறார்கள். இவர் முன்னால் தினமும் நடை திறந்து  நடை அடைக்கும்வரை தேங்காய் உடைக்கிறார்கல்  108 அல்லது 1008 தேங்காய்கல் உடைப்பதாக வேண்டிக்கொள்கிறார்கள். வாசலிலேயே தேங்காய் மூட்டை மூட்டையாகக் குவிக்கப்பட்டுள்ளன.1

கொட்டாரக் கரையிலிருக்கும் மகாதேவர் கோயிலில் உள்ள வினாயகர் சன்னதியின் முன்னால் தினமும் அடுப்பு மூட்டி அப்பம் செய்கிறார்கல். காலையில் நடை திறக்கும்போது தொடங்கினால் நடை அடைக்கும் வரை செய்கிறார்கள்.25

மண்ணார்சாலை என்ற ஊரில் ஒரு பிரசித்தமான கோயில் இருக்கிறது. இது ஒரு குடும்பக் கோயில் நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த மூத்த பெண்ணுக்குத் தான் பூஜை செய்யும் உரிமை இருக்கிறது. அவரை அம்மா என்று அழைக்கிறார்கள். குழந்தையில்லாதவர்கள் இந்த அம்மாவிடம் வேண்டிக்கொள்கிறார்கள். வெண்கல உருளி வாங்கி அதை சன்னதி முன்னால் கவிழ்த்து வைக்கிறார்கள். குழந்தை பிறந்த பிறகு வந்து உருளியை நிமிர்த்தி வைத்து அதில் பாயசம் வைத்து நைவேத்யம் செய்கிறார்கள்.

Advertisements

One thought on “வித்தியாசமான கேரள ஆலயங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s