ஆஹா தகவல்

fuji_san_1_by_kz

ஆயிரக்கணக்கான வருஷங்கள் முன்னே ஜப்பானில் கோமிடேகே வால்கேனோ இருந்த இடத்தில்தான் இப்போது ஃப்யூஜி மலை [ FUJI MOUNTAIN ]  இருக்கிறது.  கோமிடேகே வால்கேனோ மேல்  [ OLD FUJI VALCANO ] கிளம்பியது. இந்த இரண்டு வால்கேனோக்களையும் [ absorb செய்து ] சேர்த்துக்கொண்டு  [ NEW FUJI VALCANO ]  உருவாகி விட்டது.  சமீபகால ஆராய்ச்சியின்படி ஃப்யூஜிமலை அடிவாரத்தில் மூன்று வால்கேனோஸ்கள் இருக்கின்றன. ஜப்பானியர்கள் இந்த ஃப்யூஜி மலையை FUJI SAN என்று அழைத்து கடவுள்போல் மதிக்கிறார்கள். அங்கு மரியாதைக்காக மனிதர்கள் பெயருடன் ஸான் சேர்த்துக் கூப்பிடும் வழக்கம் இருக்கிறது.railway_

ரயில்களில் பயணம் செய்ய விரும்பும் முதியோர்  நோயாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரயில் நிற்கும் நடைமேடை வரை நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களுக்கு உதவ நாட்டில் முக்கிய ரயில்வே ஸ்டேஷன்களில் யாத்ரிமித்ர  என்னும் திட்டத்தை ரயில்வே அமைச்சகம் விரைவில் தொடங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பயணிகள் சேவை மையத்தில் சக்கர நாற்காலி பேட்ரி கார் போன்றவற்றுடன் யாத்ரிமித்ர என அழைக்கப்படும் ஊழியர்கள் காத்திருப்பர். இந்த வசதியைப் பெற விரும்புவோர் 139 என்ற எண்ணுக்கு மொபைல் போனில் எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டும்.tomato_frog_l

மடகாஸ்கர் தீவில் தக்காளி தவளை என்றோர் இனம் உண்டு. சிவப்பு நிறத்தில் குண்டுத் தக்காளியைப்போல் இருப்பதால் இதற்கு இந்தப் பெயர். இவற்றுக்கு பாம்பிடம் பயமில்லை. காரணம் இந்தத் தவளையிடம் சிக்கினால் பாம்புகளுக்குத்தான் பயமும் சிக்கலும். பாம்பு அருகில் வந்து வாயைத் திறந்ததும் இந்தத் தவளை தனது தோல் மீது வெள்ளை நிறப் பசையை உற்பத்தி செய்துவிடும். பாம்பு தவளையைக் கவ்வினால் அந்தப் பசை பாம்பின் வாயை மூடவிடாமல் சிறிது நேரம் இறுக்கிவிடும். இந்த இடை வெளியில் தவளை தப்பிவிடும். அதுமட்டுமல்ல அந்தப் பசை பாம்பின் மீது பட்டால் அதன் உடம்பில் எரிச்சல் ஏற்பட்டுவிடும்.1-250x250

இந்தியாவிலேயே பெங்களூருக்கு அருகேயுள்ள ஹசாரிகட்டா எனுமிடத்தில் பன்றிப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது. இங்கு வளர்க்கப்படும் பன்றிக்குட்டிகளை கர்னாடக மானில மலைஜாதி மக்களுக்கு இலவசமாகக் கொடுத்து பன்றிப் பெருக்கத்தை ஊக்குவிக்கின்றனர்.xz84

கழு என்றொரு கோரைப் புல்வகை உண்டு/ அந்தவகை கோரைப் புல்லைக் கொண்டு பாய் பின்னும்போது கற்பூர வாசனையை உணர முடியும். கழு கோரைப் புல்லின் பாயின் அருகில் தேள் பூரான் உள்ளிட்ட விஷப்பூச்சிகள் நெருங்காது.  இயற்கையாகவே அதனுடைய மணமான கற்பூர வாசனையை நமது நாசிகள் உணரும். அதன் மருத்துவ குணங்கள் உடல் நலனைக் காக்கும். இப்படியாக கழு தைக்க தெரியுமா கற்பூர வாசனை என்ற சொலவடை மருவி கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்றானது.1

வெயிலுக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தின் ஜில்ஜில் ஏரியா ஏலகிரி. சென்னை மற்றும் பெங்களூருவில் இருந்து நான்கு மணி நேரப் பயணத்துக்குள் ஏலகிரியை அடைந்துவிடலாம். கடல் மட்டத்தில் இருந்து 920 அடி உயரம் ஆகும். அரிய வகை பூக்கள் மரங்கள் இருக்கும் ஏலகிரி நான்கு மலைகளால் சூழப்பட்ட இடமாகும். இதன் அருகிலேயே உள்ள ஜவ்வாது மலையில் காவலூர் என்ற இடத்தில் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய டெலஸ்கோப் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisements

2 thoughts on “ஆஹா தகவல்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s