நியூ[ஸ்]மார்ட்

ramesh

இந்த வம்சாவளியைச் சேர்ந்தவர் 46 வயதான விஞ்ஞானி ரமேஷ் ரஷ்கர். இவருக்கு 5 லட்சம் டாலர் பரிசுத் தொகை கொண்ட அமெரிக்காவின் கௌரவமிக்க லெமல்சன் எம் ஐ டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் நாசிக்கில் பிறந்த இவர் அமெரிக்காவில் உள்ள எம் ஐ டி மீடியா லேப்பில் கேமரா கலாசார ஆய்வுக் குழுவை நிறுவி நடத்தி வருகிறார். உலகம் முழுவதும் மனிதர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான கண்டு பிடிப்புக்களை உருவாக்கி புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். மூடியிருக்கும் புத்தகத்தைத் திறக்காமலேயே அதைப் படிக்க உதவும் புதிய தொழில் நுட்பத்தையும் வினாடிக்கு ஒரு டிரில்லியன் பிரேம்களைப் படம் பிடிக்கும் அதி நவீன கேமராவையும் ரஷ்கர் கண்டுபிடித்துள்ளார்.hqdefault

மிதக்கும் சிறிய வட்டத்தீவு ஒன்றினை அர்ஜென்டினாவின் வடகிழக்கு டெல்டா முனையில் கண்டு பிடித்துள்ளனர். வட்டமாக அமைந்துள்ள நிலப்பகுதியைச் சுற்றிலும் 130 அடி அகலத்துக்குத் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இயற்கையாக உருவாகியுள்ள நீரும் தானாகவே சுற்றி வருகின்றன என்பதைப் பலவிதங்களில் உறுதி செய்திருக்கிறார்கள். வட்டப்பகுதியில் இருக்கும் மரங்கள் ஒரே இடத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்துக்கு நகர்ந்துவிடுகின்றன. இந்தத் தண்ணீர் பளிங்கு போலவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அடிப்பகுதி சதுப்பு நிலமாக இருக்கிறது. மேற்பகுதி நிலம் சுழல்கிறது. துல்லிய வட்டமாக இருக்கும் இந்ட தீவுக்கு ஐ என்று பெயரிட்டுள்ளனர்/.download

ஃப்ளையிங் ரோட்ஸ்டர் என்பது ஒரு வகை பறக்கும் ஏரோமொபில் கார் சாலையில் போகும் போதே ஒரு சுவிட்சை தட்டினால் இறக்கைகள் கொண்ட காராக மாறிவிடும்.  இரண்டு பேர் மட்டுமே பயணிக்க முடியும். இந்த காரை எளிதாக தரையிறக்கவும் சாலையிலிருந்து வானில் பறக்கச் செய்யவும் முடியும். விமானம்போல் அல்லாமல் ஹெலிகாப்டரைப் போல் இயங்கக்கூடியது. ஸ்போர்ட்ஸ் கார் குட்டி விமானம் இரண்டிலிருந்தும் மாறுபட்டது. பறக்கும்போது மணிக்கு 99 மைல் வேகத்தில் செல்லும்.reshma

நியூயார்க் ஃபேஷன் வீக் ஷோவில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார் 19 வயதான இந்தியப் பெண் ரேஷ்மா குரேஷி. இவர் தனது நெருங்கிய உறவினரால் ஆசீட் வீச்சு தாக்குதலுக்குள்ளாகி ஒரு கண் பார்வையைப் பறிகொடுத்தவர். ஆசீட் வீச்சுக்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வரும் ரேஷ்மா பாதிக்கப்பட்ட பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  ‘ Make Love Not Scars “ என்ற தொண்டு நிறுவனத்திற்காக யூடியூபில் பெண்களுக்கு எதிரான குற்றங்களைப் பற்றி பதிவேற்றி வருகிறார்.diane-gujarati-lead

அமெரிக்காவின் நியூயார்க் மாவட்ட நீதிபதிகளில் ஒருவராக 47 வயது இந்திய வம்சாவளி பெண் டயானி குஜராத்தி என்பவரை நியமிப்பதாக அமெரிக்க அதிபர் அறிவித்துள்ளார். நியூயார்க் தெற்கு மாவட்ட அரசு வழக்கறிஞர் அலுவலத்தில் கிரிமினல் வழக்கு பிரிவின் துணைத் தலைவராக கடந்த 2012 முதல் பணியாற்றுபவர் செனட் அவையின் ஒப்புதலுக்குப் பிறகு இவர் நீதிபதியாக பொறுப்பேற்பார்.download-1

340 ஹெக்டேரில் பரந்திருக்கும் செரபியம் காடு. எகிப்து தலை நகர் கெய்ரோவில் இருந்து 2 மணி நேரப் பயணத்தில் இருக்கிறது.  பாலைவனத்தின் நடுவே அமைந்துள்ள இந்தக் காட்டில் ஏராளமான மரங்கள் செழித்து வளர்ந்துள்ளன.  ஜெர்மனி மற்றும் எகிப்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாலைவனமாதலை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு இந்த அதிசயத்தை நிகழ்த்தி இருக்கிறார்கள். நகரங்களில் இருக்கும் கழிவு நீரை குறிப்பிட்ட அளவுக்குச் சுத்தகரித்து நீண்ட குழாய்கள் மூலம் பாலைவனத்துக்கு அனுப்புகிறார்கள். விதைகள் மரங்கல் செடிகள் நடப்பட்ட இடங்களில் குழாய் மூலம் கழிவு நீர் வந்து சேர்கிறது.  மழையை எதிர்பார்த்து இந்தத் தாவரங்கள் வாழவேண்டிய அவசியம்  இல்லை. இந்த மரங்களில் இருந்து பெறப்படும் காய் கனிகள் நூறு சதவீதம் பாதுகாப்பானவை  கழிவு நீரில் இருக்கும் சத்துக்களும் சூரிய ஒளியும் செரபியம் காடுகளை வேகமாக வளர வைக்கின்றன. 15 ஆண்டுகளில் மரம் வெட்டக்கூடிய அளவுக்கு வளர்ந்து விடுகிறது. மரங்கள் விற்பனை செய்யப்படுவதால் மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன.

Advertisements

2 thoughts on “ நியூ[ஸ்]மார்ட்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s