உலகிலேயே யோகசாலி யார்?

st_20160618150909453120

சுகபோகத்தில் திளைத்த மன்னன் வீரசேனன் உலகிலுள்ள எல்லாவற்றையும் தான் மட்டுமே அனுபவிக்க பிறந்தவன் என்ற எண்ணம் கொண்டிருந்தான். ஒரு நாள் வீரசேனனைக் காண ராஜகுரு வந்திருந்தார்.  அவரிடம் வீரசேனன் ‘ குருவே என்னைவிட உலகில் சுகபோகம் அனுபவிப்பவர் யாரும் இருக்கிறார்களா? “ என்று ஏளனமாகக் கேட்டான். மன்னனின் மமதையை உணர்ந்த ராஜகுரு “ ஏன் இல்லை  நம் நாட்டிலேயே ஒருவர் இருக்கிறார் ‘ என்றார். ‘ அப்படியா ……….. யார் அது? நான் அவரைச் சந்திக்கவேண்டுமே “ என்றான் மன்னன்.

இருவரும் தேரில் புறப்பட்டனர். குறிப்பிட்ட இடத்தில் ராஜகுரு தேரில் இருந்து இறங்கி நடந்தார். வீரசேனனும் பின் தொடர்ந்தான். வெயில் கடுமையைப் பொருட்படுத்தாமல் முதியவர் ஒருவர் அங்கே வயலில் உழுது கொண்டிருந்தார். அவரைச் சுட்டிக்காட்டிய ராஜகுரு “ மன்னா உன்னை விட சுகம் அனுபவிப்பவர் இந்த விவசாயிதான் “ என்றார்.

வெயிலில் காயும் இவரா எல்லாவற்றையும் அனுபவிப்பவர்…….. ஒன்றும் புரியாமல் வீரசேனன் விழித்தான். அவனது விழிப்பை ரசித்த ராஜகுரு “ உழைப்பின் அருமை அறிந்த இவருக்கு வேளாவேளைக்கு நன்றாகப் பசிக்கும் குடிப்பது கூழ்  என்றாலும் ருசியாக இருக்கும். இரவில் ஆழ்ந்த உறக்கம் வரும். எவனொருவன் பகலில் உழைத்து இரவில் நிம்மதியாகத் தூங்குகிறானோ அவனே உலகை அனுபவிக்கிறான் “ என்றார். வீரசேனன் அன்று முதல் கர்வத்தை விட்டான். மக்களுக்காக பல திட்டங்கள் தீட்டி அலைந்து திரிந்து நிறைவேற்றினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s