ரிஷிவந்தியம் அர்த்த நாரீஸ்வரர்

 

நேர்முகத்தேர்வு என்றாலே அதிகாரிகளிடம் பேச பயம்  திக்குவாயால் மனக்கஷ்டம் என்ற நிலை இருந்தால் விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியத்திலுள்ள லிங்க வடிவ அர்த்த நாரீஸ்வரருக்கு தேனாபிஷேகம் செய்து வழிபடலாம். இந்தக் கோவிலில் ஆனித்திருவிழா விசேஷம்.download-25

தல வரலாறு

சிவபார்வதி திருமணம் கைலாயத்தில் நடந்தபோது தென் திசை உயர்ந்து வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரை தென் திசை செல்ல சிவன் உத்திரவிட்டார். அகத்தியர் பல தலங்களில் தங்கி சிவபூஜை செய்தபடியே சென்றார். ஓரிடத்தில் சிவன் அகத்தியருக்கு திருமணக்காட்சி தந்தார். இந்தக் காட்சி எல்லா நாளும் உலக மக்களுக்குக் கிடைக்கவேண்டும் என அகத்தியர் வேண்ட  ‘ எனக்கு  தேனாபிஷேகம் செய்யும் காலத்தில் இங்குள்ள லிங்கத்தில் என்னுடன் பார்வதியும் இணைந்து தோன்றுவாள் ‘ எனக்கூறி மறைந்தார். அதன் பின் பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி தேனாபிஷேகம் செய்து ஈசனை வழிபட்டதால் இவ்வூர் ரிஷிவந்தியம் என வழங்கப்பட்டது.

தல சிறப்புimg_20160207_175415

தேவர் தலைவன் இந்திரன் தினமும் இத்தல இறைவனுக்கு 108 குடம் பால் அபிஷேகம் செய்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தான். ஆனால் இங்குள்ள அம்பாளை வழிபடாமல் சென்று விடுவான். தன்னை வழிபடாத இந்திரனுக்கு பாடம் புகட்ட நினைத்த அம்பிகை ஒரு முறை அபிஷேக குடங்களை மறைத்து வைத்துவிட்டாள்.  குடங்களை காணவில்லையே என வருந்திய இந்திரன் அங்கிருந்த பலி பீடத்தில் தலையை மோதி உயிர் விட முயற்சித்தான். அப்போது ஈசன் தோன்றி அம்பிகைக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படி பணித்தார். அத்துடன் தினமும் நடக்கும் தேனாபிஷேக பூஜையில் பார்வதியுடன் சேர்ந்த அர்த்த நாரீஸ்வரராக காட்சி கொடுப்பதாக கூறி மறைந்தார். தேன் தானும் கெடாது  தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெடவிடாது. இதன்படி தேனாபிஷேக பூஜையில் சுயம்புலிங்கத்தில் அர்த்த நாரி ஈஸ்வரனாக காட்சி தருகிறார். அதில் இடை நெளிந்து கையில் கிளியுடன் இருக்கும் அம்மன் காட்சி தரும் அதிசயத்தைக் காண முடியும். குறைபாடு உள்ளவர்கள் தேன் வாங்கி சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த தேனை சாப்பிட்டால் பேச்சு குறைபாடு நீங்கும்.  மற்ற அபிஷேகம் நடக்கும்போது லிங்க வடிவம் மட்டுமே தெரியும். இங்குள்ள அம்பாளுக்கு முத்தாம்பிகை என்று பெயர்   அர்த்த நாரீஸ்வரரின் சுதை சிற்பமும் உள்ளது.

சிறப்பம்சம்download-33

இந்தக் கோயில் துவாபர யுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.  ரிஷிகளால் பூஜிக்கப்பட்ட அர்த்த நாரீஸ்வர லிங்கம் மண்ணில் புதைந்து கிடந்தது. விஜய நகர மன்னர்கள் காலத்தில் விவசாயம் செய்வதற்காக வீர வன்னியர் பரம்பரையினர் காடு வெட்டும்போது இது மீண்டும் கிடைத்தது. இத்தலத்திற்கு வந்து வழிபட்ட ராமருக்கு ஞானத்தையும் அகத்தியருக்கு திருமணகோலத்தையும் அர்த்த நாரீஸ்வரர் அருளியுள்ளார். அப்பர் சுந்தரர் சம்பந்தர் மாணிக்கவாசகர் ஆகியோர் ஈசனை வழிபட்டுள்ளனர்.

குக நமச்சிவாயimages-2

குரு நமச்சிவாயரின் சீடரான குக நமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்கலை தரிசித்துவிட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று தாயிருக்க பிள்ளை சோறு என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி “ நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன் எனவே இருவரையும் சேர்த்து பாடுவாயாக என்று கூற குக நமச்சிவாயரும் அதன்படியே மின்னும்படிவந்த சோறு கொண்டு வா என்ற பாடலைப் பாடினார். இந்த பாடலை கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குக நமச்சிவாயரின் பசியாற்றினாள்.

திருவிழா

ஆனித்திருவிழா  கொடியேற்றத்துடன் துவங்குகிறது

இருப்பிடம்

விழுப்புரத்தில் இருந்து ரிஷிவந்தியம் 60 கிமீ

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s