தாம்பூலத்தின் சிறப்பு

betel

பொதுவாக தாம்பூலம் எனப்படும் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்து சுவைக்கும்போது அந்தச் சுவை உடலையும் மூளையையும் சுறுசுறுப்படைய செய்கிறது. அதே நேரம் இதயத்தையும் வலுப்படுத்துகிறது.  மனித உடம்பில் உள்ள வாதம் பித்தம் சிலேத்துமம் போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும்போதோ அல்லது குறையும்போதோ நோய் வருகிறது எனச் சொல்கிறார்கள். இது முற்றிலும் சரியான காரணமாகும். இந்த மூன்று சத்துக்களும் சரியான விகிதத்தில் உடம்பில் அமைந்துவிட்டால் நோயை எதிர்த்து நிற்கும் ஆற்றல் உடம்புக்கு அமைந்துவிடுகிறது. இந்த மூன்று நிலைகளையும் சரியான விகிதத்தில் வைத்துக்கொள்ள தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தைக் கண்டிக்கும். சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தைப் போக்கவல்லது. வெற்றிலையில் உள்ள உறைப்பு கபத்தை நீக்கி விடும். ஆக பித்தம் வாதம் கபம் போன்ற மூன்று நிலைகளையும் தாம்பூலம் போடுதல் என்கிற பழக்கத்தினால் முறைப்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு அமைகிறது. இது மட்டுமல்லாது தாம்பூலம் போடும்போது ஏலம் கிராம்பு ஜாதிபத்திரி போன்றவற்றைச் சேர்த்துப்போட்டு மெல்லும்போது வாயில் உள்ள கிருமிகளை மட்டுப்படுத்துகிறது. ஜீரண சக்தியை அதிகரிக்கவும் செய்கிறது.3_2119779f

இப்போது வயதானவர்களுக்கு இருக்கக்கூடிய அபாயங்களில் மிக முக்கியமானது எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு ஆகும். சிறிதளவு முறிவு ஏற்பட்டுவிட்டாலும் முதுமையின் காரணமாகப் பெரிய பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகிறது. பல நேரங்களில் சாதாரண எலும்பு முறிவே மரணத்தைப் பரிசாக தந்துவிடுகிறது.  ஆனால் பத்து இருபது வருடங்களுக்கு முன்பு முதியவர்களுக்கு எலும்பு முறிவு என்பது அவ்வளவு சீக்கிரம் ஏற்படாது. இதற்குக் காரணம் அவர்களிடமிருந்த தாம்பூலம் தரிக்கும் பழக்கம்தான்.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறி முறைகளை நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். காலையில் சிற்றுண்டிக்குப் பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்கவேண்டும். காரணம் மதிய நேரம் வெப்பம் அதிகரிக்கும்போது உடம்பில் பித்தம் ஏறாமல் பாதுகாக்கும். அதே போல் மதிய உணவுக்குப் பிறகு சுண்ணாம்புச் சத்து அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். அது உணவில் உள்ள வாதத்தை அதாவது வாயுவைக் கட்டுப்படுத்தும். இரவில் வெற்றிலையை அதிகமாக எடுத்துக்கொண்டால் நெஞ்சில் கபம் தங்காது இந்த முறையில் தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் வழிகாட்டுதல் நெறிமுறை.

உலகில் துளசி தூதுவளை வில்வம் போன்ற இலைகளை மருத்துவப் பயன்பாட்டுக்கென உபயோகப்படுத்திக் கொள்கிறோம். ஆனால் தாம்பூலம் தரிப்பதை தினந்தோறும் உணவு உண்டத்துக்குப் பின்னர் பயன்படுத்துவது என்பது மிகவும் உகந்தது ஆகும். ஆக மொத்தம் தாம்பூலம் எனப்படும் பாக்கு வெற்றிலை  தரிப்பதில் ஆரோக்கியத்துக்கான இத்தனை நல்ல விஷயங்கள் நமக்குக் கிடைக்கின்றன. அதனால்தான்  நமது விருந்துகளில் வெற்றிலைக்கு முக்கியப்பங்கு கொடுக்கப்படுகிறது.67

திருமணம் மற்றும் சுப நிகழ்வுகளில் பைகளில் தாம்பூலம் அவசியம் போட்டிருப்பார்கள்  பழங்கள் அல்லது தேங்காய் என பையில் ஏதேனும் ஒன்றிருக்கும்  இருந்தாலும் அதற்குத் தாம்பூலப் பை என்றுதான் பெயர்  நிச்சயதார்த்த நிகழ்வில் கூட தாம்பூலம் மாற்றிக்கொண்டீர்களா என்றுதான் கேட்கிறார்கள். நம் வாழ்வில் தாம்பூலம் இடம் பெறாத மங்கள சடங்குகளே இல்லை.

நன்றி     வேத சுவாமி நாதன்  ஆன்மிக எழுத்தாளர் சென்னை

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s