ஆஹா ஆலயம்

download

அமிர்தசரஸ் வேலூரில் இருப்பது போன்று திருஆய்ப்பாடியில் ஒரு பொற்கோயில் உள்ளது. கும்பகோணம் சென்னை நெடுஞ்சாலையில் 18 கிமீ தொலைவிலுள்ள திருஆய்ப்பாடியில் 63 நாயன்மார்களுக்கு மட்டுமே  எழுப்பப்பெற்ற எழில்மிக்க கோயில் இது. சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களின் சிலைகள் ஊர்வலம் திருவிழா போன்றவை உண்டு. ஆனால் இவர்களுக்கான கோயில் திருஆய்ப்பாடியில் மட்டுமே உள்ளது. பொன்னிற விமானத்துடன் கதிரவன் ஒளியில்  தகதக என மின்னும் பேரழகுடன் விளங்குகிறது இந்தத் திருக்கோயில்ulagalandha2

விழுப்புரத்தில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ளது திருக்கோவிலூர்  இங்கு உலகளந்த பெருமாள் ஆலயம் உள்ளது. இங்குள்ள பெருமாள் 20 அடி உயரம் கொண்டவர். வலதுகால் 90 டிகிரி மேல் எழும்பி உள்ளது. வலது கையில் சங்கும் இடது கையில் சக்கரமும் இடது கால் தரையிலுமாகக் காட்சி அளிக்கிறார். பொய்கையாழ்வார் பூதத்தாழ்வார் பேயாழ்வார் ஆகியோரால் பாடல் பெற்ற தலம் இது. பிரம்மன் திருவிக்கிரம சுவாமிகளின் பாதங்களை கமண்டலத்தில் உள்ள தீர்த்தத்தால் கழுவிய நீர் இங்கே குளமாக உள்ளது. இந்தக் குளத்தில் அகத்தியர் வந்து நீராடி உலகளந்த பெருமாளை வணங்கியுள்ளதாக வரலாறு சொல்கிறது.6

கும்பகோணம் ஸ்ரீபகவத் வினாயகர் கோயில் பிரகாரத்தில் தனியாக நவக்கிரஹ வினாயகர் உள்ளார். இவர் சூரியனை நெற்றியிலும் சந்திரனை நாபிக் கமலத்திலும் செவ்வாயை வலது தொடையிலும் புதனை வலது கீழ்க்கையிலும் வியாழனை சிரசிலும் வெள்ளியை இடது கீழ்க்கையிலும் சனியை வலது மேல்க்கையிலும் ராகுவை இடது மேல்கையிலும்  கேதுவை இடது தொடையிலும் அடக்கிக் காட்சி அளிக்கிறார். கிரக தோஷம் உள்ளவர்கள் இந்த வினாயகரை வழிபடுவர். இங்கு கிரஹ தோஷ நிவர்த்தி ஹோமங்கள்  செய்யப்படுகின்றன.srim

ஸ்ரீமுஷ்ணம் என்ற இடத்தில் பூவராகன் சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இத்தல மூலவருக்கு தினந்தோறும் திருமஞ்சனம் செய்யப்படுகிறது. அதன்பிறகு பக்தர்களுக்கு முஸ்தாபி சூரணம் என்னும் பிரசாதம் வழங்கப்படுகிறது. இந்தப் பிரசாதம் பல  நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது என நம்புகிறார்கள் பக்தர்கள்.051

கேரள மானிலம் பட்டாம்பி அருகே உள்ள கிருஷ்ணபடி பாம்புகள் வசிக்கும் காட்டுப்பகுதி. அப்பகுதியில் பெரிய தரவாடு என்னும் மாளிகை போன்ற வீடு உள்ளது. இங்கு வயதான ஆண்கள் மட்டுமே வசிக்கிறார்கள். கோயிலில் பூஜை செய்வதும் அவர்களே. இங்கு பெரிய குளம் ஒன்று உள்ளது. அங்கு குளித்துவிட்டு அல்லது கை கால்களை சுத்தப்படுத்தி விட்டு நாகர்களை வணங்க வேண்டும்  நாம் நினைத்தது நிறைவேற கதலிப்பழம் படைத்து வழிபடலாம்.e11

கும்பகோணம் அருகில் அய்யாவடி கிராமத்தில் மஹாபிரந்தியங்கிரா தேவி ஆலயம் உள்ளது. சுற்றிலும் மயான பூமி. அம்பிகை சிம்ம முகத்தோடும் 18 திருக்கரங்களோடும் 4 சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் லட்சுமி சரஸ்வதியோடு காளியாகக் காட்சி தருகிறாள். இங்கு அமாவாசை தோறும் காலை 10 முதல் 1 மணி வரை நிகும்பலா யாகம்  [ மிளகாய் யாகம் ] நடைபெறுகிறது. ஒரு மூட்டை மிளகாயைத் தீயில் போட்டாலும் காரமே அடிக்காது. இத்தேவியை வழிபட பில்லி சூனியம் ஏவல் போன்ற மந்திரக் கட்டுக்களும் சாபங்களும் நிவர்த்தியாகும்  இங்கு ஒரே ஆலமரத்தில் ஐந்து விதமான இலைகளைக் காணலாம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s