ஆஹா தகவல்

barren-island-volcano

எரிமலை என்றாலே நம் கண்முன் வந்து நிற்கும் நாடு ஜப்பான்தான். ஆனால் இந்தியாவிலிருக்கும் ஒரே எரிமலை அந்தமான் தீவுக்கூட்டத்தில் ஒன்றான பாரன் என்ற தீவில் இருக்கும் எரிமலைதான். இது 2010 ஆம்  ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் கடைசியாக நெருப்பைக் கக்கியது  சுமார் 7 சதுர கிமீ பரப்புள்ள இத்தீவில் மனிதர்கள் யாரும் வசிப்பதில்லை. ஒரு சில விலங்குகள் மட்டுமே வாழ்கின்றன.maxresdefault

தாமிரபரணி நதி நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் தோன்றி தூத்துக்குடி கடலில் கலக்கிறது. தமிழ் நாட்டில் தோன்ரி தமிழ் நாட்டிலேயே கடலில் கடக்கிற நதி இது. இந்த நதிக்கரையோரம் அமைந்துள்ள சிவா விஷ்ணு ஆலயங்கள் ஏராளம்.  அதன் மகிமையும் அற்புதங்களும் எண்ணிலடங்காதவை. இந்த நதியில் நீராடுபவர்களுக்கு தாமிர உலோகச் சத்து உடலில் சேருகிறது என்பது கண்டறிந்த உண்மை. இதனால் இந்த நதியில் நீராடுபவர்களுக்கு நல்ல உடல் மற்றும் மன ஆரோக்கியம் கிடைக்கிறது.bank

1810 ல் பிரிட்டிஷ்காரார்களால் தொடங்கப்பட்ட அர்பத்நாட் வங்கி பொதுமக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கை பெற்றிருந்தது. ஆகையால் சாதாரண மக்களும் தங்கள் சேமிப்பை இந்த வங்கியில் போட்டு வைத்தார்கள். திடீரென்று 1905 ல் ஒரு நாள் வங்கி மூடப்பட்டுவிட்டது. பொதுமக்கள் அலறித்துடித்தனர். அப்போது சில நகரத்தார்களும் கல்லிடைக்குறிச்சியில் வாழ்ந்த சில வசதி மிக்கவர்களும் சேர்ந்து 1907ல் ஆரம்பித்த வங்கி தான் இந்தியன் பாங்க்  இதை சுதேசி வங்கி என்றும் அழைக்கிறார்கள்.saraswathinadi-864x500

பத்ரி நாத் அருகே மானா என்ற கிராமம் இந்தியா சீனா எல்லைக் கோட்டின் அருகில் உள்ளது. மிகவும் ரம்மியமான இந்த மலைப்பகுதியில் தான் சரஸ்வதி நதி உற்பத்தி ஆகின்றது. வியாசமுனிவர்  வினாயகர் உதவியுடன் மஹாபாரதம் எழுதிய இடமும் இதுதான். அதற்கான வரலாற்றுச் சான்றுகளும் சரஸ்வதி ஆலயமும் இந்த கிராமத்தின் அழகை பன்மடங்காகக் காட்டுகின்றது. வியானமுனிவரின் சாபத்தால் சரஸ்வதி நதி பூமிக்கு அடியில் சென்று அலகாபாத்தில் திரிவேணி சங்கமமாக யமுனை கங்கை நதிகளுடன் இணைகின்றன.download

உலகின் சிறிய நாடு வாடிகன் சிட்டி என்று தானே நினைத்தூக்கொண்டிருக்கிறோம்  ஆனால் அதைவிட சிறிய நாடு ஒன்று உள்ளது. அதுதான் பிரின்சிபாலிட்டி ஆஃப் ஸீலேன்ட்  [ principality of sealand ] சீலாந்து என்றும் குறிப்பிடுவர். இதன் பரப்பளவு நான்கு கிலோமீட்டர் மட்டுமே. இங்கே சுமார் 27 பேர் மட்டுமே வசிக்கிறார்கள். இந்த நாட்டுக்கு என்று தனி தேசியக்கொடி  தேசிய கீதம் அஞ்சல் தலை தனி இணையதளம் செய்தித்தாள்  [ சீலாந்து நியூஸ் ] எல்லாமே உள்ளன. ஒரே குறை இந்த நாடு ஐ நா சபையில் உறுப்பினர் இல்லை.blue_caves_zakynthos

கிரீஸ் நாட்டில் ப்ளூகேவ்ஸ் [ நீல குகைகள் ] என்று அழைக்கப்படும் குகைகள் இருக்கின்றன.  இந்தக் குகைகள் மீது சூரிய ஒளி பட்டால் குகை பல வண்ணங்களில் ஒளிர்கிறது. கடல் அலைகளின் சீற்றம் காலை வேளைகளில் இருக்காது. சிறிய படகு மூலம் அருகில் சென்று பார்க்கலாம். அதனால் சுற்றுலாப் பயணிகள் அதிகம் இங்கு வசிக்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s