உறுதி கொண்ட நெஞ்சம்

download (1) - Copy

சுவாமி விவேகானந்தர் எந்த நிலையிலும் எதற்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காதவர். அவரது வாழ்வில் நடந்த இந்த  நிகழ்வு இதற்கு உதாரணம்  விவேகானந்தருக்கு அவரது தந்தை விஸ்வநாதனந்தர் திருமணம் செய்துவைக்க விரும்பினார். விவேகானந்தரோ “ திருமணமா……………. முடியவே முடியாது “ என மறுத்துவிட்டார். ஒரு முறை அவரது மனதில் குடும்பம் மனைவி குழந்தைகள் என்று ஒரு படம் வரைந்து பார்த்தார். அது சரியாகப் படவில்லை. முடிவில் இதெல்லாம் வேண்டாம்.  சத்திய சொரூபனான இறைவனை நேரில் காண வேண்டும்  அதற்கு இல்லறம் சரி வராது. ஒரு காவி ஆடையுடன் உலகம் முழுக்க சுற்றியேனும் கடவுளைக் கண்டுவிட வேண்டும் என எண்ணிக்கொண்டார்.

விஸ்வநாததந்தர் தன் மகனிடம் ‘ நரேன்  நான் இப்போது ஒரு பெரிய பணக்கார சம்பந்தம் பேசி முடிக்க இருக்கிறேன்  அவர்கள் உன்னை ஐ சி எஸ் படிக்க இங்கிலாந்து அனுப்ப பணம் தருகிறார்கள். இது தவிர ஏராளமான வரதட்சணையும் தருகிறார்கள். பெண்ணும் பேரழகி நீ படித்து அதிகாரியாக வேண்டும். உன்னை இந்த ஊரே பாராட்டவேண்டும் “ என்றார் கண்களில் கனவலைகள் மிதக்க.

விவேகானந்தரோ ‘ இல்லை தந்தையே திருமணம் என்ற பந்தத்துக்குள் என்னைத் தள்ளாதீர்கள். ஐ சி எஸ் என்ற படிப்பு வெறும் சம்பளத்தையும் அதிகாரத்தையும் தான் தரும். நான் ஞானம் என்ற பெரிய படிப்பைக் கற்றுக் கொள்ளப்போகிறேன். என்னை என் வழியில் விட்டு விடுங்கள். “ என்று மறுத்துவிட்டார்.

தான் எடுத்த முடிவில் துளியும் மாற்றமில்லாமல் நின்று வென்று காட்டினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s