டாக்டர் சிவா

 

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பர். நோய் நொடியைப் போக்கி ஆரோக்கியம் தந்தருளும் மருத்துவராக திருவான்மியூர் மருந்தீஸ்வரர் விளங்குகிறார்.

தல வரலாறுtiruvanmiyur1

வசிஷ்டர் செய்த சிவபூஜையின் பயனாக இந்திரன் தன்னிடமிருந்த காமதேனுவை அவருக்கு பரிசாக அளித்தான். ஒரு முறை பூஜை நேரத்தில் காமதேனு பால் சுரக்காமல் தாமதம் செய்தது. இதனால் கோபம் கொண்ட வசிஷ்டர் அதைக் காட்டுப்பசுவாக போகும்படி சபித்தார். கலங்கிய காமதேனு தனக்கு விமோசனம் அளிக்க முனிவரிடம் வேண்டியது. பூலோகத்தில் வன்னி மரத்தடியில் சுயம்பு லிங்கமாக உள்ள சிவனை வணங்கினால் விமோசனம் உண்டாகும் என வழிகாட்டினார். அதன்படி இத்தலம் வந்த காமதேனு சுயம்புவாக இருந்த சிவன் மீது தினமும் பால் சுரந்து வழிபட்டது. இதனால் இங்குள்ள இறைவன் பால்வண்ண நாதர் என்னும் பெயர் பெற்றார்.download

கொள்ளைக்காரராக இருந்த ராமாயண ஆசிரியர் வால்மீகி திருந்தும் எண்ணத்துடன் இங்குள்ள சிவனை வணங்கி வந்தார். ஒரு முறை அவர் சிவனை தரிசிக்க வந்தபோது அவரைக்கண்டு பயந்த காமதேனு ஓடியது. அப்போது அங்கிருந்த சிவலிங்கத்தை அறியாமல் மிதித்து விட்டது. லிங்கத்தின் மேல் அதன் கால் தடம் பதிந்தது. இன்றும்கூட சுவாமியின் தலையிலும் மார்பிலும் பசு மிதித்த தடம் இருக்கிறது.  திரு நாவுக்கரசரால் புகழ்ந்து பாடப்பெற்றது இத்தலம். இங்குள்ள ராஜகோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது.

வன்னிமரக்காட்சிvannimaram

தன்னை வணங்கி திருந்திய வால்மீகிக்கு சிவன் வன்னி மரத்தின் அடியில் காட்சி தந்தார். அப்போது வால்மீகி சிவனிடம் “ பெருமானே தாங்கள் என் பெயரால் இந்த தலத்தில் எழுந்தருள  வேண்டும் ‘ என்றார். அதற்கேற்ப சுவாமிக்கு வன்மீக நாதர் என்ற பெயர் ஏற்பட்டது. வன்மீகம் என்றால் புற்று  வால்மீகி காட்டில் தவம் செய்தபோது அவரைச் சுற்றி புற்று வளர்ந்தது. புற்றின் பெயரால் வன்மீகம் எனப்பட்ட அவரது பெயர் வால்மீகி என மருவியது. அவரது பெயரிலேயே இத்தலம் திருவான்மியூர் எனப்படுகிறது. இங்குள்ள சிவன் வன்மீக நாதர் எனப்படுகிறார். பிரகாரத்தில் வால்மீகிக்கும் அகத்தியருக்கும் சிவன் காட்சி தந்த வன்னிமரம் உள்ளது.  நடராஜர்  அருணகியாரால் பாடல் பெற்ற முத்துக்குமாரர் மூன்று சக்தி வினாயகர்கள் 108 சிவலிங்கம் பஞ்சலிங்கங்கள் உள்ளனர். தினமும் காலையில் கோபூஜை செய்யப்பட்ட பின்பே சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். சுவாமிக்கு வான்மீகி நாதர்  வேதபுரீஸ்வரர் அமுதீஸ்வரர் பால்வண்ண நாதர் என்ற பெயர்களும் உண்டு/ இங்கு சிவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அம்மனுக்கு திரிபுரசுந்தரி என்பது திரு நாமம்.  மூலவரின் விமானம் சதுர்வஸ்தம் என்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. உற்சவருக்கு தியாகராஜர் என்பது பெயர்.

மருந்தீஸ்வரர்maruntheeswarar_1333509044

அகத்தியர் இங்கு சுவாமியை வணங்கி தவம் செய்தார். அவருக்கு வன்னி மரத்தடியில் காட்சிதந்த சிவன் உலகில் தோன்றியுள்ள நோய்களுக்கு உண்டான மருந்துகள் குறித்தும் மூலிகைகளின் தன்மை குறித்தும் உபதேசம் செய்தார். எனவே இத்தலத்து ஈசன் மருந்தீஸ்வரர் எனப்படுகிறார். இவரை டாக்டர் சிவா என பக்தர்கள் செல்லப் பெயரிட்டு அழைக்கின்றனர். இத்தல வினாயகரின் திரு நாமம் விக்னேஸ்வரர் இவருக்கு நைவேத்தியமாக பொங்கல் படைக்கப்படுகிறது.

மேற்கு பார்த்த சிவன்tvm_front-face

அபயதீட்சிதர் என்னும் பக்தர் சுவாமியை வழிபட வந்தபோது கடும்மழை பெய்தது. வெள்ளப்பெருக்கு ஏற்படவே அவரால் சுவாமியை தரிசிக்க முடியவில்லை. அவர் சுவாமிக்கு பின்புறம் இருந்ததால் சுவாமியின் முதுகுப்பகுதியை மட்டுமே தரிசிக்க முடிந்தது. வருத்தம் கொண்ட அவர் சிவனே உன் முகம் கண்டு தரிசனம் செய்ய அருள மாட்டாயோ? என வேண்டினார். அவருக்காக சிவன் மேற்கே திரும்பி காட்சி தந்தார். இதனால் இங்கு சிவன் மட்டும் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். அம்பாள் சுவாமிக்கு பின்புறமாக தெற்கு நோக்கியும் முருகன் வினாயகர் கிழக்கு நோக்கியும் காட்சி தருகின்றனர். அம்மன் திரிபுரசுந்தரிக்கு நவராத்திரி ஒன்பது நாளும் ஒன்பது வித அலங்காரம் செய்வர்

இருப்பிடம்

சென்னை திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலையில் கோயில் உள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s