ஆஹா தகவல்

1789

முன்னாள் மும்பையின் ஒரிஜினல் ஏழு தீவுகளில் ஒன்று  மாசாகான். வீடு அலுவலங்கள் என எப்போதும் பரபரப்பாக உள்ள பகுதி. ஆனால் ஒரு காலத்தில் இது மீனவர் பகுதி. இந்த பகுதி முதலில் போர்த்துகீசிரியர்களிடமும் அடுத்து 16 ம் நூற்றாண்டில் பிரிட்டிஷார் கையிலும் வந்தது. இன்று இந்த மாசாகான் ஒரு அழகிய கம்பீரமான சலவைக்கல் கல்லறையைக் கொண்டுள்ளது. இதன் கம்பீரத்தை தூரத்திலிருந்து பார்ப்பவர்கள் இதனை மும்பை தாஜ்மகால் என அழைப்பார். இந்த கல்லறையில் 46வது இமாம் ஆகாகான் 1 என்ற இம்ரான் ஹாசம் அலிஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானிலிருந்து 1840 ல் மும்பைக்கு வந்த இவர் மும்பையிலேயே நிரந்தரமாய் தங்கி 1881 ல் இறந்து போனார். பிறகு மூன்று வருடத்தில் எழுப்பப்பட்டதுதான் இந்த கல்லறை.actress-sarojadevi

ஒரே நேரத்தில் தமிழில் எம் ஜி ஆர்   சிவாஜி ஜெமினி  தெலுங்கில் என் டி ராமாராவ்  நாகேஸ்வரராவ் கன்னடத்தில் ராஜ்குமார் உதயகுமார் ஹிந்தியில் திலீப் குமார் ராஜேந்திரகுமார் என ஜோடி சேர்ந்து நடித்து புகழ்பெற்றவர் நடிகை சரோஜா தேவி.king-t

தாய்லாந்தில் மன்னருக்கு முடிசூட்டும்போது திருக்கதவுகள்    திறக்கப்படும் என்னும் தமிழ்ச் சொல்லை சொல்லித்தான் முடிசூட்டுவார்களாம்.k-kamaraj

எம் ஜி ஆர் சொன்னது  ‘ காமராஜரிடம் ஒரு கைப்பெட்டி இருப்பதைக் கண்டேன். அதற்குள் என்ன இருக்கும் என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. அவரோடு நெருங்கிப் பழகியவர்களாலும் சொல்லமுடியவில்லை. அவரைத்தவிர யாரும் அந்தப் பெட்டியைத் திறந்ததில்லை. இப்போது இந்த நினைவு இல்லத்தில் காமராஜரின் அந்த கைப்பெட்டி இடம் பெற்றுள்ளது. அதற்குள் என்னதான் இருந்தது என்று கண்டறிய ஆவலுடன் திறந்தபோது உள்ளே காமராஜரின் அம்மா படம் இருந்தது. பெற்ற தாயின் படத்தை எப்போதும் தன்னுடன் வைத்து பாதுகாத்தவர் பெருந்தலைவர் காமராஜர் என்பதை அறிந்ததும் மெய் சிலிர்த்துப் போனேன்.”

 

சில பறவைகள் ஆபத்துக்காலங்களில் தங்கள் உடல் நிறத்தையும் அமைப்பையும் சுற்றுச் சூழலுக்கு ஏற்ப மாற்றி எதிரியின் கண்களில் மண்ணைத் தூவி ஏமாற்றித் தப்பும் குணமுடையவை. இங்குள்ள பறவையின் பெயர் பிட்டர்ன்bittern_-_botaurus_stellaris

இது தன் உடலைக் குறுக்கி விரைப்பாக்கித்தான் அமர்ந்திருக்கும். தாவரத்தண்டைப் போலாக்கிக் கழுத்தும் அலகும் வானத்தை நோக்கி நீண்டிருக்க அமர்ந்துகொண்டிருக்கிறது. அதே சமயம் எதிரி தாக்க நேர்ந்தால் அதற்கும் தயாராக எச்சரிக்கையோடு காத்திருக்கிறது  உடல்கழுத்துப் பகுதியின் இறகுகள் அழுத்தப்பட்டுள்ளன. புயல் மழைப் பருவங்களில் இப்பறவை நாணல் புதரின் தண்டுகளில்  அமர்ந்து அதன் ஆட்டத்துக்கு ஏற்ப ஆட்டம் போடும். அப்போது அது தன் உடல் நிறத்தை விரோதியின் கவனத்தைக் கவராதிருக்க முட்டாளாக்க மாற்றிக்கொள்ளும்.frog-mouth

இன்னொரு பறவை போர்டகஸ் என்று பெயர்   மோர்போர்க் என்றும் பிராக் மவுத் என்றும் கூட இதை அழைப்பதுண்டு. ஆபத்து காலத்தில் சூழ்னிலைக்கேற்ப தன் உடலை மாற்றிக்கொள்ளும் குணமுடையது. இது இரவு நேரத்தில் சஞ்சரிக்கும் பறவை. கதகதப்பான பூச்சிகள் நிறைந்த இரவுக்காற்றில் தன் பெரிய அலகை திறந்தபடி வாயின் உட்பக்கமுள்ள மஞ்சள்  நிறம் தெரியும்படி கண்களை அகல விரித்தபடி பறந்து போகும். பகல் வேளையில் மரத்தின் மீது அமர்ந்திருக்கும் நிமிர்ந்த நிலையில் இறக்கையை உடலோடு இறுக்கியபடி பட்டுப்போன மரக்கிளை போல கிளையோடு கிளையாக கண்களை மீடி ஆழ்ந்த உறக்கத்திலிருக்கும் பார்ப்பவர்களுக்கு அது அம்மரத்தின் பட்டுப்போன கிளை என்று தோன்றும்.1

இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் உள்ள பிஷப் காட்டன் பள்ளிதான் இந்தியாவின் முதல் பள்ளி. துவங்கிய ஆண்டு 1859ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி. இதை ஸ்தாபித்தவர் பிஷப் ஜார்ஜ் எட்வர்ட் லைன்ச் காட்டன். இந்த பள்ளியில் 3 லிருந்து 12 வது வகுப்புகள் வரை உள்ளது. இது தங்கிபடிக்கும் பள்ளியாகும். 2009ல் இதன் 150 ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. 500 மாணவர்கள் தங்கி படிக்கின்றனர். இதன் ஸ்தாபகர் பின்னாளில் பெங்களூரிலும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு பள்ளிகளை துவக்கினார். இதனை டைம்ஸ் ஆப் இந்தியா  அவுட் லுக் உட்பட பல சர்வதேச இதழ்களும் மிகச் சிறந்த தங்கிப் படிக்கும் பள்ளி என இந்த பள்ளியை புகழ்ந்துள்ளன.maxresdefault

மேற்கத்திய நாடுகளின் பாரம்பரியக் கலை இந்த ‘ பாலே ‘ நடனம். சுமார் 400 வருடங்களுக்கு முன்பு சீமான்களின் பொழுதுபோக்கு கலையாக இருந்து வந்தது. கடந்த 12ம் நூற்றாண்டில் பிரெஞ்சு மன்னர் 14ம் லூயி பாலே நடனத்தின் விற்பன்னராக இருந்தவர் இவர்தான் இக்கலையை பிரபலமாக்கியவர். 18ம் நூற்றாண்டுவாக்கில் ஓபரா எனப்படும் பொழுதுபோக்கு இசைக்கூடங்களில் வளர்ந்தது. பின் சினிமாவில் நன்கு வளர்ச்சி பெற்றது. பாலே நடனத்தில் ரஷ்யாவே புகழ்பெற்ற நாடாகும். 1936க் ரோமியோ ஜூலியட் நடனம் உலகப்புகழ்பெற்ற நடனமாகும். அண்ணா பால்லோவா சிறந்த நடன அழகியாவார். பாலே நடனத்தில் பங்கு பெறும் பெண்கள் பாலேரினா என்றழைக்கப்படுவர்.

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s