பளீர் டிப்ஸ்

c16

.வாய்ப்புண் எளிதில் குணமாக சப்ஜா விதையை முதல் நாள் இரவே தண்ணீரில் நன்றாக ஊறவைத்துப் பிறகு வடிகட்டி அத்துடன் பாலைச் சேர்த்து சர்க்கரையுடன் தினம் மூன்று வேளை அருந்தினால் விரைவில் குணமாகும்.

அரிசியை வேகவைக்கும்போது சிறிது நெய் ஊற்றினால் தண்ணீர் வெளியே வராது.download-2

காலையில் செய்த சாம்பாரை இரவில் உபயோகப்படுத்த சிறிது வெந்தயம் தனியாவை வறுத்துப் பொடித்து அத்துடன் ஒரு ஸ்பூன் சீரகத்தைச் சேர்த்து அரைத்து விட சாம்பார் மணக்கும்.

Carrot Kheer Recipe
Carrot Kheer Recipe

கேரட் பாயசம் செய்து இறக்கியபின் அத்துடன் பாதாம் எஸென்ஸ் சேர்த்தால் அசல் பாதாம் கீர் போலவே இருக்கும்.download-1

காய்ந்த  திராட்சைப் பழத்தைப் பசும்பாலில் ஊறவைத்து பிழிந்து அந்தச் சாற்றை வடிகட்டி குழந்தைகளுக்குக் கொடுத்து வர மலச்சிக்கல் தீரும்.pigeon-gas-stove

கேஸ் அடுப்பைப் பற்றவைக்கும் போது சில சமயம் டப் என்ற சத்தத்துடன் பர்னரின் அடிப்பகுதியில் எரியும். இதைத் தடுக்க கேஸை ஆன் செய்ததும் இரண்டு வினாடிகள் காத்திருந்து பிறகு பர்னரின் மேல் லைட்டரை இடிக்காமல் பற்றவைக்க சத்தமில்லாமல் எரியும்.floral-glass-painting-04

சுவரில் மாட்டக்கூடிய கிளாஸ் பெயின்டிங் ஓவியங்கள் மணி வேலைப்பாடு எம்ப்ராய்டரி என எந்தக் கைவலை செய்து முடித்து ப்ரேம் போடுவதற்கு முன்பும் அதன் நான்கு பக்கங்களிலும் குந்தன் கற்கள் சமிக்கி கண்ணாடி ஒர்க் செய்துவிட கூடுதல் பளப்பளப்போடு அழகாகக் கண்ணைக் கவரும்.42242

இரண்டு ஸ்பூன் கசகசா எடுத்துத் தண்ணீரில் ஊறவைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு கறிவேப்பிலை சிறிதளவு எடுத்து மூன்றையும் மைய அரைக்கவும். இந்தக் கலவையை முகத்தில் அம்மை வடுக்கள் உள்ள இடத்தில் நன்றாகப் பூசி உலரவிடுங்கள். இருபது நிமிடங்கள் கழித்து பாசிப்பயறு மாவினால் முகத்தைக் கழுவுங்கள். மூன்று நாட்களுக்கு ஒரு முறை செய்யுங்கள்  அம்மை வடுக்கள் நீங்கி முகம் மினுமினுக்கும்.download

எலுமிச்சம் பழத்தைப் பிழிந்த சாற்றில் ஒரு தேக்கரண்டி அளவு சீரகத்தையும் அதே அளவு மிளகையும் கொஞ்சம் கலந்து வெயிலில் காயவைத்து காய்ந்தபின் நன்றாகப் பொடித்து எடுத்து பாட்டிலில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். காலை மாலை இருவேளையும் இதில் அரைத்தேக்கரண்டி அளவு எடுத்து வாயிலிட்டு வென்னீர் குடித்தால் பித்தம் குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s