நவதானியங்கள்

 

நவராத்திரி என்றதுமே வாண்டு முதல் வயதானவர்கள்வரை அனைவரின் நினைவுக்கு வருவது நவதானிய சுண்டல்தான். நவராத்திரிக்கும் நவதானியத்துக்கும் என்ன சம்பந்தம்?nava

தட்சிணாயணம் காலமான புரட்டாசி மாதம் சரியாக குளிர் காலத்தின் நடுவில் வரக்கூடிய மாதம். சூரியனின் வெப்பம் பூமியின் மேல் வெகு குறைவாகப்பரவும் இந்தக் காலம் குளிர் தொடங்கி அடைமழையான ஐப்பசிக்கு முந்தைய மாதம் பூமி குளிரத்தொடங்கும். இந்தக் காலம் ஒரு விதத்தில் நோய்கள் பரவும் காலம் மற்றும் உடலில் சோம்பல் அதிகரித்து நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்திருக்கும் காலமுமாகும்.25

குளிர் தொடங்கிய இந்தக் காலம் பூமியில் உள்ள அனைத்து உயிரினமும்  [ தாவரங்கள்  மரங்கள் விலங்குகள் பறவைகள் மனிதர்கள்  என அனைத்தும் ] சூரிய ஒளியை வெப்பத்தை சக்தியைத் தேடி நிற்க அனைத்துக்கும் சக்தி வேண்டும் என்று சமூக சிந்தனையுடன் கொண்டாடப்படும் ஒன்பது நாள் திருவிழா இந்த நவராத்திரி திருவிழா.j283

உடலுக்கு சக்தியையும் உள்ளத்துக்குத் தெம்பையும் அளிக்கவேண்டிய கட்டாயமான காலமான இந்தப் புரட்டாசி மாதத்தில் அவற்றினை சீராக அளிக்க நமது முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ள முறைகள் தான் பட்சணங்களும் கூட்டு விழாவும். உடலுக்குச் சக்தியை அளிக்கக்கூடிய புரதம் நிறைந்த உணவுகள் தான் நமது தானியங்கள்.. ஒவ்வொரு கிரகத்துக்கும் ஏற்றவாறு ஒவ்வொரு தானியத்தை வகுத்த நமது முன்னோர்கள் அதிலும் ஆயிரம் ஆயிரம் அர்த்தங்களுடன் வகுத்துள்ளனர். நவதானியங்கள் என்பது பொதுவாக ஒவ்வொரு நாளுக்கும் ஏற்ற தானியங்கள்   அதாவது சூரியன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான ஞாயிறு அன்று உடலுக்கு வெப்பத்தினை அளிக்கக்கூடிய கோதுமையை வகுத்துள்ளனர். அவ்வாறு குளிர்ச்சிக்கு உச்சமான சந்திரன் உச்சமாக இருக்கக்கூடிய நாளான திங்களன்று அரிசியை வகுத்தனர். உடலில் உள்ள சீரான ரத்தச் சுழற்சிக்கு சிவப்பு கிரகம் ஆட்சி பெற்றிருக்கும் செவ்வாய்க்கிழமை சிவப்பு தானியமான முழு துவரையும் புத்தி கூர்மைக்கு புதனன்று பாசிப்பயறையும் வலமான தேகத்துக்கு வியாழக்கிழமையன்ரு கொண்டைக்கடலையும் உடலின் இனப்பெருக்க உறுப்புக்களின்  ஆரோக்கியத்துக்காக வெள்ளி ஆட்சி பெற்றிருக்கும் நாளில் மொச்சையும் உடலுக்கான கடின உறுப்பு பலப்பல சத்துக்களைக் கொண்ட எள்ளினை சனிக்கிழமைக்கும் மன ஆரோக்கியத்துக்கு முக்கியமான சாயா கிரகங்களான ராகு கேதுவுக்கு கொள்ளும் கருப்பு உளுந்தினையும் வகுத்தனர்.download

இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்பினையும் உடலின் திரவ ஓட்டத்தினையும் மன ஆரோக்கியத்தினையும் புத்தியின் செம்மையையும் சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. இவற்றினை வெறுமனே சுண்டலாகவும் உருண்டையாகவும் செய்வதற்கு பதில் அவற்றை ஊறவைத்த பின் முளை கட்டி சுண்டலாகத் தயாரிப்பது மேலும் அதன் சத்துக்களைக் கூட்டிக் கொடுக்கிறது. புரதச்சத்து உடலில் விரைவாகச் சேர ஏதுவாகும்.

கோதுமையில் புரதம் சுண்ணாம்பு பாஸ்பரஸ் இரும்பு கரோடீன் நியாசின் என பல சத்துக்கல் நிறைந்துள்ளன. உமியிலிருந்து தவிடு நீக்காத அரிசியில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. புரதம் நார்ச்சத்து வைட்டமின் சத்துக்கள் அரிசியில் நிறைந்துள்ளன.sprouts1

கொண்டைக்கடலை மொச்சை கொள்ளு கருப்பு உளுந்து பாசிப்பயறு துவரை ஆகியவற்றில் தாது உப்புக்கள் நார்ச்சத்து கால்சிய பாஸ்பரஸ் இரும்புச்சத்து புரதம் என அனைத்துச் சத்துக்களும் நிறைந்துள்ளன.

எள்ளின் விதையில் உடலுக்கு தேவையான கால்சியம் இரும்பு வைட்டமின் பி1  வைட்டமின் சி உள்ளது. ஆக்ஸாலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது உடலுக்கு வன்மையும் குருதிப்பெருக்கையும் உண்டாக்கும். இதனை உருண்டையாகவும் தயாரித்து நவராத்திரி விழாவில் அளிப்பதுண்டு.download-1

நவகிரகங்களுக்கு ஏற்ற நவதானியங்கள் மட்டுமல்லாது இன்று பல நாட்டு தானியங்களும் நமக்கு எளிதில் கிடைக்கின்றன. அவற்றிலும் நார்ச்சத்து வைட்டமின் தாது உப்புக்களுடன் புரட்டாசி மாதத்துக்குத் தேவையான புரதச்சத்தும் அதிகம் உள்ளது. உதாரணத்துக்கு நரிப்பயறு நாட்டுத்தட்டை காராமணி நாட்டு கொத்தவரை நாட்டு நிலைக்கடலை வெள்ளைமுத்துச்சோளம் போன்றவற்றையும் சேர்த்து அந்தந்த நாட்களுக்கு உகந்த தானியத்தில் சுண்டலும் பாயசமும் தயாரித்து இந்த வருட நவராத்திரி விழாவினை நமது உற்றார் உறவினருடன் ஆரோக்கியமாகக் கொண்டாடி மகிழலாம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s