பிள்ளையார் சுழியின் பெருமைகள்

g_l4_620

மாபெரும் கவிஞர்களெல்லாம் பிரதான காவியத்தை இயற்றுவதற்கு முன் பிள்ளையாரை மனதில் நினைத்து காப்புச் செய்யுள் எழுதுவார்கள். மேலும் உலகம் சிவமயம் என்பதை உணர்த்தும் விதத்தில் பிள்ளையார் சுழி போட்டு அதன் கீழ் எழுதத்தொடங்குவார்கள். எல்லாவற்றையும் பிள்ளையார் கவனித்துக்கொள்வார் என்பது நம்பிக்கை. தும்பிக்கையான் மீது நம்பிக்கை கொண்டால் எந்தப் பிரச்னையானாலும் அவர் பார்த்துக்கொள்வார்.download

வேழமுகத்து வினாயகரைத் தொழ வாழ்வு மிகுத்துவரும் என்று எழுதியுள்ள பாடலைப் பாருங்கள். யானைமுகமும் அழகிய துதிக்கையும் கருணைமழை பொழியும் கண்களையும் நோக்கினால் ஓம் என்ற பிரணவம் தெரியும். இதில் அகரம் அம்பாளையும் உகரம் பிள்ளையாரையும் மகரம் மகேஸ்வரனையும் குறிக்கும்.

நாம் சுபகாரியங்கள் எதைத் தொடங்கினாலும் அது நல்லவிதமாக நடைபெற முதலில் வினாயகரை வணங்கித்தான் தொடங்குவது வழக்கம். கோவில் கும்பாபிஷேகம் என்றால் கூட முதலில் கணபதி ஹோமம் வைப்பதுதான் வழக்கம்.tamil-daily

கயிலையிலும் தேவலோகத்திலும் அழகே உருவாக காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவரும் விதமாக நடமாடியதால் தேவர்களும் முனிவர்களும் யார் இந்த பிள்ளை? இந்த பிள்ளை யார்? என்று கேட்டுக்கொண்டனர். அதுவே நாளடைவில் பெயராக மலர்ந்தது. பிள்ளையார் மிகவும் எளிமையானவர். ஆற்றங்கரை ஓரத்திலும் அரசமர நிழலிலும் வீற்றிருந்து அண்டியவர்களுக்கு எல்லாம் அருள்புரிகிறார்.download

இவருக்கு கோபுரமோ கொடிமரமோ மாட மண்டபமோ மதிற்சுவரோ தேவையில்லை. நம் உள்ளத்தில் ஓர் இடமளித்தால் போதும்  . மண்ணில் செய்து வைத்தாலும் வருவார் . மஞ்சளில் செய்து வைத்தாலும் வருவார். பிள்ளையார் சுழி போட்டுக் காரியங்களைத் தொடங்கி பிறர் போற்றும் விதம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s