இறை அழகு

 

22-zen-300-2-300அந்த ஊரில் அருகருகே இரண்டு ஜென் மடாலயங்கள் இருந்தன. ஒன்று பெரியது  மற்றொன்று சிறியது. இரண்டு மடாலயங்களையும் இணைத்தது உயரம் குறைவான ஒரு குட்டிச் சுவர்.

பெரிய மடாலயம் பூந்தோட்டம் புல்தரை அடர் மரங்கள் என்று விஸ்தாரமானது. அந்தத் தோட்டத்தைப் பரமரிப்பதற்கென்றே ஒரு தோட்டக்காரனும் இருந்தான். புல் தரைகளை வெட்டிச் சீராக்குவது செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது தோட்டத்தைப் பெருக்கித் துப்புரவாக வைத்திருப்பது என்று தன் கடுமையான உழைப்பால் அதை ஒரு நந்தவனமாகவே மாற்றியிருந்தான். அவனது கைவண்ணத்தால் மடாலயத் தோட்டமே துடைத்துவைத்தது போல் பளிச் சென்றிருந்தது.22-zen2-300

இந்தத் தோட்டக்காரனின் பணியை குட்டிச்சுவருக்கு அப்பாலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார் சிறிய மடாலயத்தைச் சேர்ந்த ஜென் துறவி ஒருவர். அதைக் கவனித்த தோட்டக்காரன் சுவருகே சென்று “ சுவாமி தோட்டம் சுத்தமாக இருக்கிறதா? ‘ என்று கேட்டான். கண்களில் பெருமை வழிய அதற்கு அந்த ஜென் துறவி ‘ எல்லாம் சரியாக இருக்கிறது. ஆனாலும் ஒரே ஒரு குறை…..” என்றார். ‘ குறையா?  என்னவென்ரு சொன்னால் திருத்திக்கொள்கிறேன் “ என்றான் தோட்டக்காரன்.  “ வார்த்தைகளாகச் சொல்ல முடியாது. நான் உள்ளே வர உதவி செய்  குறையை நிவர்த்தி செய்கிறேன் “  என்றார் துறவி.blooming-tree-full-pink-flowers-s

தோட்டக்காரனும் உடனே அந்தத் துறவி குட்டிச்சுவரைத் தாண்டி உள்ளே வருவதற்கு உதவி செய்தான். தோட்டத்துக்குள் பிரவேசித்த துறவி பூக்கள் பூத்துக்குலுங்கும் அந்த மரத்தை தன் கைகளால் பற்றிக்கொண்டு பலம் கொண்ட மட்டும் உலுக்கினார். அவரது குலுக்கலில் மரத்திலிருந்த சில பூக்களும் இலைகளும் உதிர்ந்தன. சிறிது நேரத்துக்குப் பிறகு மரத்திலிருந்து தம் கைகளை விடுவித்துக்கொண்ட துறவி தோட்டக்காரனைப் பார்த்து ‘ இப்போது தோட்டம் இன்னும் அழகாக இயற்கை எழிலுடன் காட்சி அளிக்கிறது.  உதிர்ந்து கிடக்கும் பூக்களும் இலைகளும் சூழ நிற்கும் மரமே இயற்கை அழகு இறை அழகும் கூட ‘ என்றபடியே சிரித்தார்.  தோட்டக்காரனும் அதை ஆமோதித்தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s