நலம் அருளும் நவ நதிக் கன்னியர்

kasivisvanathar1கும்பகோணம் அருள்மிகு காசி விஸ்வநாதர் கோயிலின் மஹாமகக் குளக்கரையில் அமைந்துள்ளது நவகன்னியர் சன்னதி. கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி காவிரி துங்கபத்ரா கிருஷ்ணா சரயு ஆகிய நவ நதிக்கன்னியர் இச்சன்னதியில் ஒன்றாகக் காட்சி தருகின்றனர்.daily_news_8278881311417

ஒரு சமயம் இந்த நவ நதிக்கன்னியர் மக்கள் தாம் செய்யும் பாபங்களை தங்களில் நீராடி புனித மடைகின்றனர். ஆனால் அப்பாவங்களை சுமக்கும் நாங்கள் எங்கே நீராடிப் புனிதமடைவது? என சிவபெருமானிடம் முறையிட்டு வழி கேட்கின்றனர். அவர்களின் பாபம் தீர பூலோகத்தில் ஒரு புண்ணிய தீர்த்தம் உள்ளதெனக் கூறிய ஈசன் அவர்களை கும்பகோணம் மகாமகக் குளத்துக்கு அழைத்து வந்தார். இத்தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக நிகழ்வின்போது நீராடினால் நீங்கள் சுமக்கும் உங்களது பாபங்கள் அனைத்தும் தீரும் என்று கூறி அருளினார்.potramaraikulam

சிவபிரான் கூறியபடி நவகன்னியர் அத்தீர்த்தத்தில் நீராடி தங்கள் பாபங்களைத் தொலைத்ததோடு அக்குளக்கரையிலேயே சன்னிதி கொண்டனர். இந்த நவகன்னியரின் நேரடிப் பார்வையில் மகாமகக் குளம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு மகாமகத்தன்றும் இந்த நவ நதிகளும் இத்தீர்த்தத்தில் நீராடி தங்கலைப் புனிதப்படுத்திக்கொள்வதாக வரலாறு.  இந்தப் புராண வரலாற்றைக் கூறும் விதமாக கஒயிலின் ஐந்து நிலை ராஜகோபுர நுழைவாயில் முகப்பின் மேலே நவகன்னியரை மகாமக தீர்த்தத்தில் நீராட ஈசன் அழைத்துச் செல்லும் சுதைச் சிற்பங்களைக் காணலாம்.kasivisvanathar2

காசி விஸ்வநாதர் திருக்கோயில் தீர்த்தக்கரையில் அமைந்துள்ள இந்த நவகன்னியர் சன்னிதி பரிகார வழிபாட்டுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பன்னிரெண்டு வெள்ளிக்கிழ்மைகள் விரதமிருந்து மகாமகக் குலத்தில் நீராடி வாசமுள்ள பூக்கள் எண்ணெய் சந்தனம் மஞ்சள் குங்குமம் வெற்றிலை பாக்கு பால் சோறு தேங்காய் வாழைப்பழம் போன்றவற்றை நிவேதனம் செய்து பொங்கல் படையலிட்டு நவ கன்னியரை வழிபட வேண்டும். அச்சமயம் சுமங்கலிப்பெண்கள் மற்றும் ஏழை எளியோருக்குத் தங்களால் முடிந்த தான தர்மங்கலைச் செய்து வந்தால் விரைவில் மகப்பேறு வாய்க்கும். திருமணமாகாத பெண்களுக்கு நிச்சயம் திருமணம் கைகூடும்  மனவேற்றுமையால் பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர். தீராத நோயால் பாதிக்கப்பட்டோர் நோய் நீங்கி நலம் பெறுவர். மேலும் உரிய வயது வந்தும் ருதுவாகாத பெண் குழந்தைகள் பூப்பெய்தவும் இந்த வழிபாட்டைச் செய்து பெற்றோர் பலனடைகின்றனர்.download

தவிர ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரத்தன்று மாலையில் மகாமகத் திருக்குளத்தை ஒன்பது முறை வலம் வந்து நவகன்னியருக்கு பாலாபிஷேகம் செய்து நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் குடும்பக் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வம் சேரும் எனப்து நிகழப்பெற்றவர்களின் அனுபவக்கூற்று.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s