ஆஹா ஆலயம்

kasturi-ranganatha

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கம்பீரமான ராஜகோபுரத்துடன் கிரிதாரியாய்ய அருள்மிகு வேணுகோபால சுவாமி ஆலயம் உள்ளது. பவானி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. பெருமாளின் நின்ற இருந்த கிடந்த மூன்று கோலங்களையும் இந்த ஒரே கோயிலில் தரிசிக்கலாம். தாயார் கல்யாண மகாலட்சுமியாக அருள்பாலிக்கிறாள். சகல தோஷங்களையும் நீக்கும் சக்கரத்தாழ்வாரும் யோக நரசிம்மரும் கல்விக் கடவுளாம் ஹயக்ரீவரும் அமிர்த கலசபாணியாகிய தன்வந்திரி பகவானும் இங்கு ஒருசேர தனிச் சன்னதி கொண்டுள்ளது விசேஷம்.silpiscorner03-01

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சங்கரமடத்திலுள்ள  லிங்கத்திற்கு கை உள்ளது. லிங்கத்தின் முகம் பொறிக்கப்படிருப்பதைப் பார்த்திருக்கிறோம். ஆனால் லிங்கத்துக்குக் கை உள்ள திருத்தலம் இதுவே. இறைவன் கை உயர்த்தி ஆசீர்வாதம் செய்வது போல் அமைந்துள்ளது. இறைவி பிரகச் சந்திரகுஜாம்பிகை. மேலும் மோஹாம்பாள் அம்மன் தனிச் சன்னதியில் அருள்பாலிக்கிறார். மன நிலை சரியில்லாதவர்கள் இந்த அம்பிகையை வலம் வந்து வேண்டிக்கொண்டால் சரியாகிவிடும் என்பது நம்பிக்கை.t_500_296

திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் நீலக்குடி கிராமம். இதன் அருகில் வடகண்டம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு அருள்மிகு கரவீர நாதர் கோயில் உள்ளது. பிரதிமாதம் அமாவாசை அன்று இங்குள்ள தல விருட்சத்துக்கு 11 குடங்கள் தண்ணீர் ஊற்றி வேண்டிக்கொண்டால் நாம் வேண்டுவது நடக்கும். அதற்காக கோயிலில் எவர்சில்வர் குடம் வைத்திருக்கிறார்கள். வடக்கே உள்ள பிரகாரத்திலுள்ள கிணற்றில் தண்ணீர் எடுத்து தென்புறமாக சென்று மேற்புறம் சுவாமிக்குப் பின்புறம் உள்ள தல விருட்சத்தில் தண்ணீர் ஊற்றிவிட்டு வடபுறமாக வந்து திரும்பவும்  தண்ணீர் எடுத்து 11 தடவை ஊற்றினால் கோயிலை 11 சுற்று சுற்றியதற்குச் சமமாகும்.cyddkire

கடலூரில் உள்ள பாடலீஸ்வரர் கோயிலில் நவராத்ரி சமயத்தில் ம்அட்டும் திறக்கப்படும் வாசல் ஒன்று உண்டு. அதற்கு நவராத்ரி வாசல் என்று பெயர். ஏனெனில் நவராத்ரி சமயத்தில் பராசக்தி இவ்வாசலில் வழியாகப் புறப்பட்டு சிவன் சன்னதிக்குச் சென்ரு அவரை வலம் வந்து மீண்டும் தன் சன்னதிக்கு திரும்புகிறார்.hqdefault

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அமைந்துள்ளது. கதிரேசன் மலைக்கோயில். அங்கு சிலை உருவ வழிபாடு கிடையாது. முருகனைப் போற்றும் விதமாக ஒரு பெரிய வேல் மட்டுமே உள்ளது. இக்குன்றின் அடிவாரத்தில் ஒரு குகை இருக்கிறது. அதில் ஒரு சுரங்கப்பாதை கயத்தாறு கட்டப்பொம்மன் கோட்டைக்கும் மற்றொன்ரு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் தெப்பத்ஹ்டுக்கும் செல்வதாக சொல்கின்றனர்.2016060

சோலைமலை முருகப்பெருமானுக்கு தினமும் அபிஷேகம் செய்ய கோயிலின் உட்புறமுள்ள முருக தீர்த்தத்தில் உள்ள நீரையே பயன்படுத்துக்கிறார்கள். இந்தத் தீர்த்தம் வற்றாத தீர்த்தமாகும். விபூதி மேடு என்ற மலை இடுக்கிலிருந்து வரும் இந்தத் தீர்த்த நீரைப் பருகினால் நீண்டகால நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s