ஆதிசங்கரருக்கு ஞானப்பால் கொடுத்த துர்கை

shankara_parents

காலடி என்கிற திவ்ய க்ஷேத்திரத்தில் பிராமண நம்பூதிரி குடும்பத்தைச் சேர்ந்த சிவகுருவுக்கும் ஆர்யாம்பிகைக்கும் புத்திரனாக அவதரித்த  ஆதிசங்கரரை அத்வைத சித்தாந்தத்தை போதித்த தத்துவ ஞானி என்ரு உலகமே போற்றுகிறது.  இளம் பிராயத்திலேயே தத்துவ சிந்தனையையும் ஆன்மிக ஞானத்தையும் அவருக்கு அளித்தவள் சக்தியான ஸ்ரீ துர்கா தேவிதான். அந்த அருளை அவர் பெற்றதற்கு ஒரு பின்னணி கதையும் உண்டு.

காலடிக்கு வெகு அருகில் மாணிக்கமங்கலம் என்று இப்பவும் ஒரு கிராமம் உள்ளது. அங்கு பார்வதி தேவியின் நவ வடிவங்களில் ஆறாவது வடிவமான ஸ்ரீ துர்கா தேவியின் கோயிலும் இருக்கிறது. ஆதிசங்கரரின் தந்தையான சிவகுரு நித்தமும் தன்னுடைய நித்தியப்படி பூஜைகளுடன் இத்தலத்தினில் உறையும் ஸ்ரீ துர்கைக்கு பால் வைத்து நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வினியோகம் செய்தது போக மீதமுள்ள பாலை வீட்டுக்கு எடுத்து வந்து மனைவிக்கும் பாலகனான ஆதிசங்கரருக்கும் கொடுக்கும் வழக்கத்தினைக் கொண்டிருந்தார். ஒரு நாள் ஏதோ ஒரு அவசர வேலை நிமித்தம் பக்கத்திலுள்ள ஊருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாயிற்று.tamil

தான் துர்க்கைக்கு செய்யும் நைவேத்தியம் விட்டுப் போகக்கூடாது என்கிற எண்ணத்தில் சிவகுரு தன் மகன் ஆதிசங்கரரை அழைத்து துர்கைக்கு பாலை நைவேத்தியம் செய்துவிட்டு வரும்படி கூறினார். ஆதிசங்கரரும் ஆத்மார்த்தமாக துர்கைக்கு பாலை சமர்ப்பித்துவிட்டு கண்களை மூடி அம்பாளை வழிபடலானார்.

கண்களை விழித்துப் பார்த்தபோது கிண்ணத்தில் இருந்த பால் முழுவதுமே காணாமல் போயிருந்தது. தினமும் தந்தை வீட்டுக்கு பாலைக் கொண்டு வருவார். இன்று மட்டும் பால் மீதமில்லையே என்று குழம்பினார். கண்ணீர் விட்டு அழுதார். வீட்டுக்குச் சென்றால் தானே அந்தப் பாலைக் குடித்துவிட்டதாக தந்தை கோபிப்பார் என்ரு பயந்த அவர் பாலைத் திருப்பித்தரும்படி துர்கையிடம் முறையிட்டார்.download

சங்கரரின் முன்னே ப்ரசன்னமான் துர்கை காலியான கிண்ணத்தில் பாலை நிரப்பி வீட்டுக்கு எடுத்துப் போகும்படி கூறி ஆசீர்வதித்தாள். கொடுத்தனுப்பிய படியே வீட்டுக்கு பால் திரும்பியதைக் கண்டு பெற்றோர் விசாரிக்க நடந்ததை விவரமாக சங்கரர் விளக்கினார். சிவகுருவின் கனவிலும் தோன்றிய துர்கை நடந்ததைக் கூறி பின்னாட்களில் இந்து சமயம் ஆல் போல் தழைக்க ஒரு தூணாக அமைவான் ஆதிசங்கரர் என்றும் கூறி மறைந்தாள்.

ஸ்ரீ துர்கையின் அருட்கடாட்சமும் அவளது அருட்பிரசாதமும் கிடைத்ததால்தான் ஆதிசங்கரருக்கு அத்வைதத்தினை போதிக்கும் ஆன்மிகச் சிந்தனை மற்றும் மேதாவிலாசம் ஆகியவை மேம்பட்டதாகத் தலவரலாறு கூறுகிறது என்று கோயில் நம்பூதிரி விளக்கினார்.download-1

அவரின் அவதார ஸ்தலமான காலடியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் மாணிக்கமங்கலம் அமைந்துள்ளது. காலடி செல்பவர்கள் அவசியம் இந்த ஸ்தலத்தினில் இருக்கும் ஸ்ரீ துர்கா தேவியை தரிசனம் செய்துவிட்டு வரவும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s