ஹாட் கேக்ஸ் நினைவுகள்

cake1

பெரிய கூட்டுக்குடும்பத்திலிருந்து வந்ததால் எனக்கு திருமணமான புதிதில் சமையல் அதிகம் தெரியாது.  என் பிறந்தகத்தில் பாட்டி அம்மா சித்தி என நிறைய பேர் இருந்ததால் சமையலறை பக்கம் நான் அதிகம் போனதில்லை.  சுற்றுக் காரியம் கூட எனக்கு அதிகம் இருக்காது.  புக்ககம் வந்து நிறைய கஷ்டப்பட்டேன். பக்கத்தில் குடியிருந்த புவனா மாமியிடம் தான் சமையலே கற்றுக்கொண்டேன்.

இதில் என் பெரிய பெண்ணுக்கு சென்ட்ரல் பள்ளியில் இடம் கிடைத்ததால் அந்தப் பள்ளியின் அருகில் இருந்தால் கொண்டுவிட்டு அழைத்துவர சௌகர்யமாக இருக்கும் என்ற எண்ணத்தில் மல்காஜ்கிரியில் இருந்த சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு பள்ளியின் அருகிலேயே இருந்த விக்ரம்புரி காலனிக்கு குடியேறினோம்.  அப்போது என் இரண்டாவது பெண் 16 மாத குழந்தை.

திருமணத்திற்கு முன்பும் திருமணம் ஆகி இரண்டாவது பெண் பிறக்கும் வரையும் ஆசிரியையாக வேலை பார்த்துக்கொண்டிருந்ததால் கணவர் அலுவலகம் பெண் பள்ளி என்று போன பிறகு  அப்போது வீட்டில் பொழுது போகமல் திண்டாடிக்கொண்டிருந்தேன்.  நாங்கள் குடியேறியது அந்த நாட்களிலேயே கொஞ்சம் பணக்கார ஏரியா  யாரும் வீட்டை விட்டு வந்து பொதுவில் அரட்டை அடிப்பது பேசுவது என்பதெல்லாம் அந்த ஏரியாவில் கிடையாது.  எல்லார் வீட்டுக் கதவும் சாத்தியே தான் இருக்கும். பல வீடுகளில் நாயும் வெளியே காவல்காரர்களும் இருப்பார்கள்.  அப்போதுதான் என் வீட்டிற்கு அருகில் ஒரு பெண்மணி கேக் பிஸ்கெட் செய்யும் முறைகளை கற்றுக்கொடுப்பதாக என் வீட்டு சொந்தக்கார பெண்மணி சொன்னார்.  .  நான் சொல்வது 1985ல் கதை.sa1

மதியம் வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ளலாமே என்ற ஆசையில் நானும் அந்த வகுப்பில் சேர்ந்தேன்.  ஒரு நாளைக்கு 10 ரூபாய் பீஸ்.  கேக் பிஸ்கெட் செய்ய தேவையான பொருட்களை நாம் தான் வாங்கிச் செல்லவேண்டும். அவர் அவரது கேக் தயாரிக்கும்  [ OVEN ]  பாத்திரத்தை மட்டுமே உபயோகிக்க கொடுப்பார்.cooking-oven

சுமார் பத்து நாட்கள் சென்று வந்தேன்.  OVEN வாங்கும் அளவிற்கு எங்களுக்கு அப்போது வசதி இல்லை.  அவர் குக்கரிலேயே கேக் எப்படி செய்வது என்றும் சொல்லிக்கொடுத்தார்.  அவ்வளவுதான். என் பெரிய பெண் சாதம் டிபன் சாப்பிட ரொம்பப் படுத்துவாள்.  இப்போதாவது மாறினாளா  என்றுதானே யோசிக்கிறீர்கள்.  இப்போது என்னையல்ல அவள் மாமியாரைத்தானே படுத்துகிறாள்  அதனால் எனக்குக் கவலையில்லை. அவளுக்கு பேக்கரி உணவுகள் என்றால் இன்றும் கொள்ளைப் பிரியம்.

என் பெண் அவளின் வகுப்புத் தோழிகளின் பிறந்த நாள் விழாவிற்கு சென்று வந்தால் அதே போல் விதவிதமான கேக்குகள் வேண்டுமென கேட்டு பிடிவாதம் பிடிப்பாள்  அதனால் வாரம் ஒரு முறை கேக் பிஸ்கெட் என புதுப்புதுவிதமாக செய்து அசத்துவேன்.  என் பெண்ணின் பிறந்த நாட்களுக்கு என் கையாலேயே கேக் செய்து அதில் ஐசிங் செய்ய முடியாமல் GEMS  மிட்டாய்களையும் POPPINS மிட்டாய்களையும் வைத்து அலங்கரித்து அசத்துவேன். chocolate

சாம்பார் ரசம் என சாதாரண சமையல் செய்யத் தெரியாத நான் கேக் வகைகள் செய்வதைப் பார்த்த என் அம்மாவால் இது தனது   பெண்தானா என்பதையே நம்ப முடியாமல் இருந்தார்.  இன்று காலை வாக்கிங் போனபோது ஏதோ கேக் வாசனை பற்றி பேசிக்கொண்டிருந்தபோது நான் கேக் கற்றுக்கொண்ட நிகழ்ச்சி நினைவுக்கு வந்ததால் ஏற்பட்ட பதிவு இது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s