அன்னை தந்த ஐந்து காசு

tn_20160709170752232491

தொண்டை மண்டல சதகம்  அறப்பளீசுர சதகம் குலரேச சதகம் தண்டலையார் சதகம் செயங்கொண்டார் சதகம் என சதக நூல்கள் பல உண்டு. தமிழகத்தின் கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்கள் என பலவிதமான அபூர்வ தகவல்கள் இந்த நூல்களில் இடம் பெற்றிருக்கும். இவற்றில் தொண்ட மண்டல சதகத்தை எழுதியவர் படிக்காசு புலவர். கல்வியில் தலைசிறந்த இவர் ஊர் ஊராகப்போய் அனைவருக்கும் நல்வழி காட்டி அறிவைப் புகட்டி வந்தார். சிலர் கேட்டுத் திருந்தினார்கள். பலர் இவரைக் கேலி செய்தனர்,

அவர்களை எண்ணி புலவர் மனம் வருந்தினார். ஒளிவீசும் விளக்குகள் ஏராளமாக இருக்க அத்தனையும் அணைத்துவிட்டு இவர்கள் வெளிச்சத்தைத் தேடி அலைகிறார்களே என்ற வேதனையுடன் சிதம்பரத்தை அடைந்தார். அங்கே……………………. ஆடல்வல்லான் நடராஜனின் அற்புதத் திருக்கூத்து காட்சி கண்டு தன்னை மறந்தார்.

“தில்லையில் பொல்லாத மூர்க்கருக்கு எத்தனை தான் புத்தி போதிக்கினும் ஞானம் வரவில்லை. மெல்லிய சல்லாபப் புடவை நடுராத்திரியில் குளிரைத் தாங்குமோ? நடுச்சந்தை தன்னில் செல்லாக் காசும் செல்லுமோ?  தில்லைவாழ் சிதம்பரனே “ என்று நடராஜ பெருமாளிடம் தன் மனக்குறையை வெளியிட்டார். அருகில் இருந்த அன்னை சிவகாம சுந்தரியிடமும் தன் வேண்டுகோளைச் சொன்னார்.  அவருடைய நினைவை பற்பல நிகழ்வுகள் அப்படியே வந்து மூஒட அவற்றை அப்படியே பாடலாக்கி அன்னையின் திருவடிகளில் சமர்ப்பித்தார்.ringllart

அன்னையே உன் பிள்ளையான முருகப்பெருமானுக்கு சூரசம்ஹாரம் செய்வதற்காக வேல் கொடுத்தாய். உன் திருக்கல்யாண வைபவத்தின்போது அம்மியின் மீது வைக்க உன் மணவாளருக்கு உன் கால்களைக் கொடுத்தாய். கவுணியர் குலத்தில் உதித்த திரு ஞானசம்பந்த குழந்தைக்கு சீர்காழி குளக்கரையில் பால் கொடுத்தாய். அனைவரையும் ஆட்டிப்படைக்க மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். இவ்வளவு பேர்களுக்கும் இவ்வாறு கொடுத்த நீ எனக்கு ஏதும் கொடுக்கவில்லையே என்று பொருள்பட பாடினார். அவர் பாடிமுடித்த அதே வேளையில் பஞ்சாட்சரப்படிகளில் ஐந்து தங்கக் காசுகளைப் பொழிந்தாள். அன்னை சிவகாமசுந்தரி  அனைவரும் வியந்தனர்.tm-4

அன்னையால் பஞ்சாட்சரப் படிகளில் காசு அளிக்கப்பட்ட புலவர் அன்று முதல் படிக்காசு புலவர் என அழைக்கப்பட்டார். படிக்காசு புலவருக்கு அருள்மழை பொழிந்த அன்னை சிவகாமசுந்தரி நமக்கும் அருள்புரிய இந்த நவராத்திரி நன்னாளில் வேண்டுவோம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s