ஆஹா தகவல்

_531

ஐரோப்பாவில் தண்ணீர் சிலந்திகள் என்ற ஒரு வகை சிலந்திகள் உள்ளன. இவை ஆலயமணி வடிவத்தில் தண்ணீருக்குள்ளேயே தங்கள் வீடுகளை அமைக்கின்றன வீடுகளுக்குள் தமது அடிவயிற்று ரோமங்களின் மேற்பரப்பு வழியாகக் காற்றை நிரப்புகின்றன. பிறகு முட்டையிட்டு குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகள் முதிர்ச்சி அடைந்து தாமாக வீடுகளைக் கட்டிக்கொள்ளும் திறனை பெறும் வரை இந்தப் பராமரிப்பு நீடிக்கிறது.catfish

கேட் ஃபிஷ் என்ற ஒரு வகை மீன் இனத்தில் ஆண் மீனின் வாய்க்குள் பெண் மீன் முட்டை இடுகிறது. ஒரு மாத காலம் ஆண் மீன் அம்முட்டைகளை வாய்க்குள்ளேயே வைத்து வளர்க்கிறது. குஞ்சு வெளிப்பட்ட பிறகும் இரண்டு வாரம் குஞ்சுகள் வாய்க்குள்ளேயே இருக்கும். மீனின் வாய்க்குள் இப்படி சுமார் ஐம்பது குஞ்சுகளுக்கு மேல் இருக்கும். இந்த ஆறு வார காலத்துக்கு தந்தை மீன் எதுவும் சாப்பிடுவதில்லை.article

இருபதாம் நூற்றான்டில் ஒரே புத்தகத்தில் 1349 பக்கங்கள் கொண்ட A SUITABLE BOY என்ற பெரிய நாவலை ஆங்கில மொழியில் எழுதிய பெருமைக்குரியவர் விக்ரம் சேத் என்ற ஓர் இந்தியர். தற்போது 64 வயதாகும் இவர் தன்னுடைய 41 வயதில் 1993ம் ஆண்டு இதை எழுதி வெளியிட்டார். இந்த நாவல் 1994 ஆம் ஆண்டு பிரிட்டனின் டபிள்யூ ஹெச் ஸ்மித் பரிசையும் காமன்வெல்த் ரைட்டர் பரிசையும் வென்றது. விக்ரம் சேத் இந்த நாவலில் இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு நாலு இந்திய குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களையே கதையாக எழுதியுள்ளார்.cauindo1

கேமரூன் நாட்டில் ஓடும் திபெனிய ஆறு ஏப்ரல் மாதந்தோறும் காணாமல் போய்விடுகிறது. இந்த ஆற்றுப்படுகை அப்போது அடியோடு உலர்ந்து காணப்படுகிறது. இந்த இடத்தில் ஓர் ஆறு ஓடியதற்கான அடையாளம் எதுவும் காணப்படுவதில்லை. இதேபோல் அங்காலா நாட்டில் உற்பத்தியாகும் குபாங்கோ என்ற ஆறு 1590 கிமீ ஓடி பின்னர் ஆவியாகி கலகாரி பாலைவனத்தில் மறைந்துவிடுகிறது. பொதுவாக ஆறுகள் கடலில் அல்லது ஏரியில் கலப்பதைத்தான் படித்திருக்கிறோம். ஆனால் இதுபோன்ற விந்தையான ஆறுகள் உலகின் இயற்கை அதிசயங்கள்.460spain

ஸ்பெயின் நாட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் சாலையில் நடுப்பகுதி காலியாகவே இருக்கிறது. அதில் ஆம்புலன்ச் தீயணைப்பு வாகானம் போன்ற அவசரகால வண்டிகள் மட்டுஅமெ செல்ல அனுமதி உண்டு. 5 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டாலும் நடுப்புறச் சாலைப் பகுதிக்குள் யாரும் புகுந்து செல்வதில்லை. கடமை தவறாமல் வரிசையாக செல்கிறார்கள் அந்த அளவுக்கு அங்கு சாலை விதிகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s