ஒன்பதின் மகத்துவம்

download

எண்களில் மிகச் சிறப்பான எண்ணாகக் கருதப்படுவது ஒன்பது. ஒன்பது என்ற எண்ணுக்கு சமஸ்கிருதத்தில் நவம் என்று பெயர். நவ என்றால் புதிய புதுமை எனப் பொருள்களும் உண்டு. ஒன்பது என்ற எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்வர்.temple

ஒன்பது என்ற எண்ணுக்கு வெளி நாடுகளிலும் முக்கியத்துவம் உண்டு. சீனர்களின் ஸ்வர்க்க கோபுரம்  ஒன்பது வளையங்களால் சூழப்பட்டுள்ளது. எகிப்து ஐரோப்பா கிரீக் முதலான நாடுகளும் 9 என்ற எண்ணை சிறப்பாகப் பயன்படுத்துகின்றன. புத்த மதத்தில் முக்கியச் சடங்குகளெல்லாம் ஒன்பது துறவிகளைக் கொண்டே நடைபெறுகின்றன. பெண்ணின் கர்ப்பம் முழுமையடைவது ஒன்பதாம் மாத நிறைவில்தான்.9-multi

ஒன்பது என்ற எண் கணிதத்தில் சிறப்பு பெற்றது. ஒன்பதின் வர்க்க எண் கண எண்களைக் கூட்டினால் ஒன்பதே வரும் கூட்டலிலும் கழித்தலும் பெருக்கல் வகுத்தலிலும் ஒன்பதின் மடங்கு எண்களைக் கூட்டினால் ஒன்பதாகவே மீதம் நிற்கும். ஆகவே தான் ஒன்பதாம் எண் வடிவம் மாறாதது. இயல்பை இழக்காதது என்போம். நம் நாட்டில் பாராபரியமாகவே சிறப்பான விஷயங்கள் எல்லாம் ஒன்பதின் தொகுதியாகவே கூறப்படுவதுண்டு. எல்லாம் நவ என்றே துவங்கும்  நவ ரௌத்ரி  காளி  கலவிகரணி பலவிகரணி பல்ப்பிரதமனி சர்வபூத தமனி மனோன்மணி ஆகியோரைச் சொல்வர்.download-2

அதுபோல் நவ வீரர்கள் என புராணம் கூறுவது வீரபாகு வீரகேசரி வீரமகேந்திரன் வீரமகேசன் வீரபுரந்திரன்  வீரராக்ஷசன்  வீரமார்த்தாண்டன் வீரராந்தகன் வீரதீரன் ஆகியோரை.tamil

இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்கு பயன் படுத்த வேண்டிய திரவியங்களாக ஒன்பது பொருள்கள் சிறப்பிடம் பெறுகின்றன. மஞ்சள்  பஞ்சாமிர்தம் பால் நெய் தேன் தயிர் சர்க்கரை சந்தனம் விபூதி ஆகியன அவை. பூஜை என்றால் விரதம் இல்லாமலா ?  விரதங்களும் கூட நவத்தை வைத்தே சிறப்பிடம் பெறும். சோம வார விரதம், திருவாதிரை விரதம், உமா மகேஸ்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம். கேதார விரதம். ரிஷப விரதம் கலயாண சுந்தர விரதம் சூல விரதம் என விரதங்களும் ஒன்பதாய் விரவிக்கிடக்கின்றன.p106

நவ நிதிகள் என சங்கம் பதுமம் மகாபதுமம் மகரம் கச்சபம் முகுந்தம் ருந்தம் நீலம் வரம் என இந்த நிதிகள் இறைவன் தந்தருளட்டும் என நாம் வாயார வாழ்த்துவோமேnavagraha02

நவகிரஹங்கள் ஒன்பது எனும்போது அவற்றுக்கான தலங்களும் புகழ் அடைந்துவிட்டன. சூரியனார் கோயில் திங்களூர் வைதீஸ்வரன் கோயில் திருவெண்காடு ஆலங்குடி கஞ்சனூர் திரு நள்ளாறு  திரு நாகேஸ்வரம் கீழ்ப்பெரும்பள்ளம் என நவகிரக தலங்களாகச் சென்று வழிபடுவது மரபு.dsc00248

வீரம் பூரம் ரசம் ஜாதிலிங்கம் கண்டகம் கவுரி பாஷாணம் வெள்ளை பாஷாணம் ம்ருதர்சிங் சிலாஜித் இவையெல்லாம் சித்தர்கள் போற்றி கொண்டாடிய பாஷாணங்கள்  ஆம் நவ பாஷாணங்கள். இப்படி சிறப்பெல்லாம் ஒன்பதில் நிலைத்திருக்க அன்னைக்கான வழிபாடும் அதில் முடிவதில் வியப்பில்லைதான்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s