சூறாவளி சுற்றுப் பயணம் 1

dsc07708

இயந்திரகதியில் நடந்து கொண்டிருந்த வாழ்வில் சற்று மாறுதல் இருக்கட்டுமே என்று கடந்த 22ம் தேதி  நானும் என் பிள்ளையும் தெற்கே சுற்றுப் பயணம் கிளம்பினோம்.  விடாத மழை தெலுங்கானாவில்  இதிலிருந்தும் விடுபட நினைத்தோம். ஹைதிராபாத் சென்னை எக்ஸ்பிரஸ் அன்று பலத்த  மழை காரணமாக செகந்திராபாத்திலிருந்து கிளம்ப வேண்டியது நாம்பள்ளியிலிருந்து கிளம்பியது.  ஆனால் அது குண்டூர் நிலயத்தில் தடம் சரியாக இல்லாத காரணத்தினால் மாற்றுப்பாதையில் செல்ல நேர்ந்தது.dsc07744

இரவு முழுவதும் விடாத மழை.  இரயில் உள்ளே காபி டீ எதுவும் வரவில்லை. எங்கள் எதிர் சீட்டில் இரண்டு கிறிஸ்துவ நண்பர்கள் பயணம் செய்தனர்  அவர்களின் சொந்தக்காரர்கள் ரேணிகுண்டா ஸ்டேஷனில் சுடச்சுட அவர்களோடு சேர்த்து எங்களுக்கும் டிபன் எடுத்து வந்து கொடுத்தார்கள்  நல்ல பசியில் அந்த உப்புமா எங்களுங்கு அமிர்தமாக இருந்தது.

தெலுங்கானாவில் கிளம்பி சென்னை செல்லவேண்டிய இரயில் தெலுங்கானா ஆந்திரா கர்னாடகா தமிழ்நாடு என நான்கு மானிலங்களைக் கடந்து மறு நாள் மதியம் 12.30 க்கு சென்னை சென்டரலை அடைந்தது.dsc07774

எங்களை அழைத்து செல்ல என் பெண் சென்டரலுக்கு வந்திருந்தாள். அவள் வீட்டிற்கு சென்று குளித்து சாப்பிட்டு சற்று ஓய்வு எடுத்துக்கொண்டு பாண்டிச்சேரியை  நோக்கி காரில் பயணமானோம். வழியில் திருவிடந்தை  என்னும் ஊரில் நித்திய கல்யாண பெருமாள் குடிகொண்டுள்ளார்.  அங்கு புனர் நிர்மாண வேலைகள் நடந்து வருகிறது. இந்த புரட்டாசியில் கல்யாண பெருமாளை தரிசனம் செய்து கொண்டோம்.  பிறகு அங்கிருந்து மாமல்லபுரம் சென்று பல்லவ மன்னனின் கலையார்வத்தை கண்டு மகிழ்ந்து சுமார் 7 மணிக்கு என் பிறந்த வீடான பாண்டிச்சேரியை அடைந்தோம்.dsc07777

Advertisements

3 thoughts on “சூறாவளி சுற்றுப் பயணம் 1

  1. சூறாவளிச் சுற்றுப்பயணமா? பேஷ்! பேஷ்! படிக்க ஆவலாக இருக்கிறேன்.
    நித்யகல்யாணப் பெருமாள் இருக்குமிடம் திருவிடந்தை. கொஞ்சம் திருத்தி விடுங்கள், ப்ளீஸ்.
    எப்போது நீங்கள் உங்கள் அனுபவங்களை எழுதப் போகிறீர்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். பயண அனுபவங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்.

    நல்வாழ்த்துகள்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s