சூறாவளி சுற்றுப்பயணம் 2

dsc07850

பாண்டிச்சேரியை அடைந்த நாங்கள் அன்றிரவு அனைவருடனும் பேசி சிரித்து பொழுது போக்கினோம். விடிகாலை 6 மணிக்கு என் பிள்ளை கிருஷ்ணா மட்டும் டிரைவருடன் கிளம்பினான். முதலில் சிதம்பரம் கோயிலுக்கு சென்று நடராஜர் தரிசனம் முடித்துக்கொண்டு அங்கிருந்து வைதீஸ்வரன் கோவில்,  திருமணஞ்சேரி, வள்ளலார் தட்சணாமூர்த்தி, கும்பகோணம் மஹாமகக்குளம்  கும்பேஸ்வரர் கோவில்  உப்பிலியப்பன் கோவில் எல்லாம் தரிசனம் செய்து கொண்டு மதியம் தஞ்சாவூர் சென்றடைந்தான். dsc07864dsc07868

அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு பின் பிரகதீஸ்வரர் கோவிலை தரிசனம் செய்து கொண்டு திருச்சி சென்றான்.  அங்கு மலைக்கோட்டையை தரிசனம் முடித்துக்கொண்டு  பிறகு ஸ்ரீரங்கம் அடைந்தபோது மாலை மணி ஆறு.

dsc07883dsc07898

அன்று புரட்டாசி சனிக்கிழமையானதால் ஸ்ரீரங்கனை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள்.  என் பிள்ளையும் சுமார் ஒரு மணி நேரம் வரிசையில் நின்று ஸ்ரீரங்கனை மிக அருகில் திவ்ய தரிசனம் செய்து கொண்டான்.  dsc07938dsc07960

பல முதலமைச்சர்களும் மந்திரிகளும் ஒரே நாளில் பல இடங்களுக்கு தேர்தல் சமயத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களை சந்திப்பதுபோல் இவனும் ஒரே நாளில் பல தெய்வதரிசனம் செய்து கொண்டு புண்ணியம் சேர்த்துக்கொண்டான்என்றுதான் சொல்லவேண்டும்.  ஒரே நாளில் தென் திசையில் பல கோயில்களை தரிசித்து ஒரு ரெகார்ட் செய்து விட்டான் எனவே சொல்லலாம்dsc08003

 

Advertisements

One thought on “சூறாவளி சுற்றுப்பயணம் 2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s