ஆஹா ஆலயம்

krishna-giri

கிருஷ்ணகிரி மாவட்டம் கோட்டையூரில்  நூற்றியொரு சுவாமி மலைப்பகுதியில் உள்ள ஒரு குகையில் சுமார் ஓரடி உயரமுள்ள கல் விளக்கு உள்ளது. இந்த விளக்கில் இளநீர் விட்டு எரித்தால் விளக்கு அழகாக எரிகிறது. இவ்வாறு விளக்கு ஏற்றுபவர்களின் குடும்பத்துன்பங்கள் நீங்கி மன அமைதியும் சாந்தியும் கிடைக்கிறது என்பது மக்களின் நம்பிக்கை. இளநீர் விளக்கை அது இருக்கும் இடத்திலிருந்து சற்றே மாற்றி வைத்தாலும் அவ்விளக்கு எரிவதில்லை.karungulam10

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது கருங்குளம் என்னும் கிராமம். இங்குள்ள வதளகிரி மலை மீது எழுந்தருளியிருக்கும் பெருமாள் சந்தனக் கட்டையினால் ஆனவர். காலங்காலமாகச் செய்யப்பட்டு வரும் அபிஷேகத்தினால் இந்தக் கட்டைகளுக்கு எந்தச் சேதமும் ஏற்பட்டதில்லை. இங்குள்ள கிணற்றில் நீர் சுரப்பதில்லை.img342

ராமபிரான் வீற்றிருக்கும் தலங்களில் அவருடன் ஆஞ்சனேயரும் லட்சுமணனும் கட்டாயம் இருப்பர். ஆனால் கோயம்பேடு கனகவல்லி தாயார் சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில் ராமரும் சீதையும் மட்டுமே உள்ளனர். ராமர் அரச கோலத்தில் இல்லாமல் மரவுரி தரித்த கோலத்தில் இருக்கிறார். இத்தகைய கோலத்தைக் காண்பது அபூர்வம். மேலும் கர்ப்பிணி கோலத்தில் சீதை காட்சி தருகிறாள். குழந்தை வேண்டி மனமுருக இவரை பிராத்திப்பவருக்கு அருள்புரிகிறார். மேலும் இங்கு லவ குசனுடன் வால்மீகியும் காட்சி தருகிறார்.%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%ae%e0%af%8d

திரு நெல்வேலி மாவட்டம் கடையத்தில் வில்வவன நாதர் நித்ய கல்யாணி அம்மன் கோயில் அமைந்துள்ளது. வயல்களுக்கு நடுவே அமைந்துள்ள இந்தக் கோயிலின் தலவிருட்சம் வில்வ மரம். இந்த மரத்தின் காய்களை உடைத்துப்பார்த்தால் உள்ளே சிவலிங்கம் வடிவம் இருப்பதைக் காணலாம். அதனால் இந்த மரத்தை தலமரம் என்கிறார்கள்.shivling_1_1462364127

ராஜஸ்தான் மானிலம் தோல்பூரில் உள்ள சிவலாயத்தில் தினமும் நிறம் மாறும் அதிசய சிவலிங்கம் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த இச்சிவனின் பெயர் அக்ஷலேஸ்வர் மஹாதேவ்   இந்த லிங்கமானது காலையில் சிவந்த நிறம்  நண்பகல் காவி  நிறம்  இரவில் கறுப்பு நிறம்  மீண்டும் காலையில் சிவப்பு நிறத்தை அடையும். இந்த லிங்கத்தின் உயரத்தை யாராலும் கணக்கிட முடியவில்லை. சிவபெருமான் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்துகிற ஆலயமாக இது விளங்குகிறது.crocs_1442746404

கேரள மானிலம் காசர்கோட்டில் அனந்தபுரா கோயில் உள்ளது. இங்குள்ள குளத்தில் பாபியா என்ற வெஜிடேரியன் முதல் ஒன்று உள்ளது. இதுதான் கோயில் காப்பான். இந்தக் குளத்தில் ஒரு முதலை இறந்துவிட்டால் இன்னொரு முதலை தானாக வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் குளத்தில் உள்ள முதலையை கொன்று விட்டார்கள். . மறு நாள் எங்கிருந்தோ ஒரு முதலை குளத்துக்கு வந்து விட்டது. குளத்தில் உள்ள மீன்களைக்கூட இந்த முதலை சாப்பிடாது. உச்சிக்கால பூஜையின் போது சாதம் வெல்லம் கலந்த உருண்டைகளை இந்த முதலைக்கு கோயில் குருக்கள் சாப்பிடக் கொடுக்கிறார். இதற்கு முசலி நைவேத்யா என்று பெயர்.  பக்தர்களும் பணம் செலுத்தி உருண்டைகளை வாங்கித் தங்கள் கையால் நைவேத்யம் செய்யலாம்.

 

Advertisements

One thought on “ஆஹா ஆலயம்

  1. எல்லாத் தகவல்களுமே கோவில்களைப் பற்றியதாக இருக்கிறது. கோயம்பேடு கோவில் பற்றிய தகவல் அறியாத ஒன்று. நிறம் மாறும் சிவலிங்கமும் வியப்பைத் தருகிறது.

    முசலி நைவேத்யா நமது திருக்கழுக்குன்றத்து கழுகுகளை நினைவு படுத்துகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s