உத்தர காசியில் த்ரிசூலி

 

விஸ்வ நாதர் கோயில் என்றால் எல்லோருக்கும் சட்டென்று நினைவுக்கு வருவது காசியில் உள்ள பன்னிரெண்டு ஜோதிர்லிங்கத்தில் ஒன்றான காசி விஸ்வ நாதர் கோயில்தான்.uttarkashi-ph

ஆனால் வடக்கே உத்தரகண்ட் மானிலத்தில் உள்ள உத்திர காசி என்னும் இடத்தில் விஸ்வ நாதர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. அந்தக் கோயிலுக்கும் காசி விஸ்வ நாதர் கோவில் என்று தான் பெயர்.  அந்தக் கோயிலில் சிவனைவிட சக்திக்குத்தான் வழிபாடு அதிகம். பெருமையிம் அவளுக்குத்தான். சிவனின் சன்னதிக்கு எதிரில் சக்தியின் சன்னதி அமைந்துள்ளது. சக்தியின் சன்னதியில் நுழைந்தவுடன் காணப்படுவது பிரும்மாண்டமான த்ரிசூலம் தான். இங்கு சக்தியானவள் சூல வடிவில் மட்டுமே காட்சி அளிக்கிறாள். உருவ வழிபாடு கிடையாது. அந்தச் சூலத்தின் பின்னணியினைப் பார்ப்போம்.shakti-temple

ஒரு காலத்தில் முனிஸ்ரேஷ்டர்களையும் பக்தி மேலீட்டினால் தவம் மேற்கொண்டவர்களையும் ரிஷிபத்தினிகளையும் அசுரர்கள் அடாத செயல்கள் பல புரிந்து துன்புறுத்தி வந்தார்கள். அசுரர்களின் கொடுமையைப் பொறுக்க முடியாமல் அனைவரும் சக்தியிடம் முறையிட்டார்கள். அவள் தன்னுடைய பலம் வாய்ந்த சூலாயுதத்தால் அரக்கர்களை சம்காரம் செய்தான். அவள் அரக்கர்களை சம்காரம் செய்ய உபயோகித்த சூலம்தான் விஸ்வ நாதர் கோயிலில்  உள்ள சூலம் என்கிறது புராணம்,maxresdefault

அந்தச் சூலம் பூமியில் புதைந்த காலத்தினைக் கணக்கிட முடியாது என்கிறார்கள் அது மட்டுமல்ல பூமியில் எத்தனை ஆழத்தினில் ஊடுருவி இருக்கிறது என்பதையும் அறிய முடியவில்லை என்று கூறி மேலும் நம்மை திகைக்க வைக்கிறார்கள்.

நம் பார்வைக்கு ஆறு மீட்டர் உயரமும் தொண்ணூறு செ மீ கீழ்ப்பாகச் சுற்றளவும் கொண்டதான இந்த த்ரிசூலத்தின் மேற்பாகம் இரும்பினாலும் கீழ்ப்பாகம் செம்பினாலும் அமைந்திருக்கிறது. சக்திக்கே உகந்ததும் வட நாட்டு சம்பிரதாயப்படியும் சூலமானது வேலைப்பாடு மிகுந்த அரக்குத் துணியினால் சுற்றப்பட்டிருக்கிறது.shakti-temple-trishul-uttarkashi

ஓர் ஆச்சர்யம் என்னவென்றால் நம் உடல் பலத்தினை கொண்டு அசைத்தாலும் அசையாத இந்தத் த்ரிசூலம் ஒரு விரலினைக் கொண்டு லேசாக அசைத்தால் போதும் மேற்பாகத்தில் மட்டும் அசைந்து கொடுக்கிறது. விஸ்வ நாதர் சன்னதியில் அமைந்திருக்கும் சிவலிங்கமானது 60 செ மீ உயரமும் 90 செ மீ சுற்றளவும் கொண்டது.

ஸ்ரீ பரசுராமரால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இக்கோயிலை மகாராணி காநேதி என்பவர் 1867 ஆம் ஆண்டு புதுப்பித்திருக்கிறார். இங்கு நவராத்திரி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. கங்கை யமுனை ஆகிய புண்ணிய நதிகளின் பிறப்பிடமாகக் கூறப்படும் உத்தர காசியில் உள்ள இத்திருக்கோயில் ரிஷிகேஷ் கங்கோத்ரி பாதையில் பாகீரதி நதிக்கரையினில் அமைந்து இருக்கிறது.download

ஆதிசங்கரர் ராமகிருஷ்ண பரமஹம்சர் விவேகானந்தர்  குருநானக் ஆகியோர் இந்தத் தலத்துக்கு வருகை தந்து பார்வதி தேவியின் அருளைப் பெற்று இருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.  சாட்சி கோபால் மார்க்கண்டேய மகரிஷி ஆகியோரின் விக்கிரகங்களும் இங்கு காணப்படுகின்றன. இதன் சிறப்பினைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் கேதார காண்டத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கிறது. உத்தரகாசியில் ஊரின் நடுவே அமைந்திருக்கும் இக்கோயில் காசிக்கு இணையான சிறப்புக்களைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.  எத்தனை சிறப்புக்கள் விஸ்வ நாதருக்கு இருந்தாலும் த்ரிசூல்டலிம் தான் பக்தர்கள்  குழுமுகிறார்கள்  என்பதுதான் நிதர்சனமான உண்மை   .

 

Advertisements

4 thoughts on “உத்தர காசியில் த்ரிசூலி

  1. பிரம்மாண்டமான திரிசூலி பற்றிய தகவல்கள் சூப்பர். // ஒரு விரலியைக் கொண்டு லேசாக அசைத்தால் போதும் மேற்பாகத்தில் மட்டும் அசைந்து கொடுக்கிறது.// விரலி என்றால் என்ன? விவரம் தெரிந்தால் சொல்லுங்கள்.

    1. விரலினைக் கொண்டு என்பதுதான் விரலியை என பதிவாகிவிட்டது தவறுக்கு வருந்துகிறேன். என் வலைப்பக்கம் வந்தமைக்கு நன்றி ரஞ்சனி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s