எலுமிச்சையில் இருக்கு ஏகப்பட்ட பலன்கள்

download

வெளியூர்ப் பயணத்தின்போது சிறுநீரக தொற்று ஏற்படாமல் இருக்க எலுமிச்சை சாற்றைக் கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சைச்சாறு சிறு நீரை அதிகரித்து தொற்றுக்கள் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

பொதுவாக புளிப்புத்தன்மை கொண்ட பழங்கள் ரத்தக் குழாயைச் சுத்தப்படுத்தும் எலுமிச்சை ஆன்டி ஆக்சிடன்டாக செயல்பட்டு ரத்தத்தைச் சுத்தகரிக்கும். ஆன்டி பாக்டீரியலாகவும் இருப்பதால் தோல் நோய்களை அண்டவிடாது.

காலையில் வென்னீரில் 5-10 மில்லி எலுமிச்சைச் சாறு கலந்து குடிப்பது  உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்images

வாய் துர் நாற்றம் பல்லில் வலி ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் எலுமிச்சைச் சாற்றை மிதமான வென்னீரில் கலந்து வாய் கொப்பளிக்க சரியாகும்.

கபம் அதிகமாக இருந்தால் காலையில் எழுந்ததும்  சளியுடன் கூடிய எச்சில் வாந்தி வருவது போன்ற உணர்வு இருக்கும். 10 மில்லி எலுமிச்சைச்சாறுடன் 5 மில்லி இஞ்சிச்சாறு சிறிது தேன் சேர்த்து சுடு நீரில் கலந்து குடித்தால் சட்டென நிவாரணம் கிடைக்கும்.

சிலருக்கு வயிற்றில் காற்று அடைத்தது போல் அழுத்தமாக இருக்கும். இதற்கு சுடு நீரில் எலுமிச்சைச் சாறு வறுத்துப்பொடித்த சீரகம் அரை டீஸ்பூன் சிறிது தேன் கலந்து அருந்தினால் சட்டென காற்று வெளியேறி வயிறு லேசாகும். மலச்சிக்கல் பிரச்னையும் இருக்காது.

மூல  நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி அதில் கறுப்பு உப்பு கலந்து வாயில் அடக்கிக் கொள்ளலாம். வலி குறையும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s