ஆஹா தகவல்

download

சீனாவில் சுமார் பதினெட்டாயிரம் ஆண்களைப் பரிசோதித்ததில் யாரெல்லாம் ப்ராகோலி முட்டைக்கோஸ் முதலியவற்றை அதிகமாகச் சாப்பிட்டு வருகிறார்களோ அவர்களுக்கு  நுரையீரல் புற்று நோய் அபாயம் மிகவும் குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவர்களிடம் இருந்த சிகரெட் பழக்கமும் குறைந்துள்ளது. புற்று நோயைக் குணமாக்கும் சல்போராபேன் மற்றும் பீட்டாகரோட்டின் போன்றவை முட்டைக்கோஸ் ப்ராகோலியில் மிகுந்துள்ளன. அத்துடன் அதிகளவு நார்ச்சத்தும் புரதமும் உள்ளது. குறைந்த அளவே கொழுப்புச்சத்து உள்ளது.download

சாலையில் விபத்துக்கள் ஏற்படுத்தும் விதி மீறும் வாகனங்களைக் கண்டறிய மத்திய அரசு டிஜிட்டல் இந்தியா நிறுவனம் மூலம் எளிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.  எடுத்துக்காட்டாக விதி மீறும் வாகன உரிமையாளரின் பெயரை நீங்கள் அறிய வேண்டுமானால் VAHAN space Vetricle No  என்று டைப் செய்து வாகன எண்ணைக் குறிப்பிட்டு செல்பேசி எண் 77382 99899 க்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். உடனடியாக அந்த வாகன உரிமையாளர் பெயர் வண்டி மாடல் போன்ற தகவல்கள் கிடைத்துவிடும்.rafflesia-arnoldi

இந்தோனிஷியாவின் மலைக்காடுகளில் காணப்படும் தாவரம் ரஃப்லேஸியா [RAFFLESIA]  இந்த தாவரத்துக்கு தண்டுகளோ இலைகளோ கிடையாது. இந்தத் தாவரத்தில் பூக்கும் பூதான் உலகின் மிகப்பெரிய பூவாகும். ஏறத்தாழ 1 மீட்டர் விட்டத்தில் 10 முதல் 12 கிலோ எடையில் பூக்கும் இந்தப் பூவின் நடுவில் கிண்ணம் போல இருக்கும் குழி 10 லிட்டர் அளவு நீரைக் கொள்ளும். இந்தோனிஷியா நாட்டின் மூன்று தேசிய மலர்களில் இந்த ர்ஃப்லேஸியா பூவும் ஒன்று இதன் இந்தோனிஷியா பெயர் புஷ்ப ராட்சஷாdownload-1

தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதால் உடலில் அதிகமாகக் கொழுப்பு சேர்வதை தவிர்க்கலாம் எலும்புகள் தேய்வதை தவிர்க்கலாம் உடற்பயிற்சி செய்பவர்களின் உடலில் உள்ள குரோமோசோம்களில் டிலோமர் என்ற பகுதியின் நீளம் அதிகமாகின்றது. இது வாழ் நாளை நீட்டிப்பதாகவும் புற்று நோய் வராமல் தடுப்பதாகவும் சமீபத்தில் ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.indian-institute-of-advanced-study

சிம்லாவில் பாலுகஞ்ச் என்ற இடத்தில் இந்தியன் இன்ஸ்டியூட் ஒஃப் அட்வான்ஸ் ஸ்டடி என்ற ஆராய்ச்சி நிறுவனம் உள்ளது இந்த நிறுவனம் நமது நாடு ஆங்கிலேயர் வசம் இருந்தபோது LORD DUFFERIN என்பவர் காலத்தில் 1884-1888 ல் உருவாக்கப்பட்டது. நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் அது வெயில் காலத்தில் ராஷ்டிரபதி நிவாசமாக இருந்தது.  முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணன் இந்த இல்லத்தை ஆராய்ச்சி மேற்படிப்பு படிக்கும் இடமாக 1965 ம் ஆண்டு அக்டோபர் 20ல் மாற்றினார். மாணவர்கள் இங்கு தங்கி எல்லா துறைகளிலும் ஆராய்ச்சி செய்கின்றனர்.sss

ஒவ்வொரு வகை வாழைப்பழங்களும் ஒவ்வொரு விதமான பலனை நமக்குத் தருகின்றன. பச்சை வாழைப்பழம் மலச்சிக்கலைப் போக்கும். மொந்தன் வாழைப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும். பூவன் வாழைப்பழம் மலமிளக்கியாக பயன்படும். கற்பூர வாழைப்பழம் பசியைக் கட்டுப்படுத்தும். செவ்வாழைப் பழம் தொற்று நோய்கள் வராமல் தடுக்கும். இப்படி ஏராளமான பலன்களைக் கொண்ட வாழைப்பழம் நம்மை நலத்துடன் வாழ வைக்கும் பழமாக விளங்குகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s