நியூ[ஸ்]மார்ட்

kirkin_2990723h

பிரிட்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிர்தின் நித்தியானந்தம் என்ற 16 வயது இளைஞன் மருந்துகளுக்கு கட்டுப்படாத மிகவும் தீவிரமான மார்பகப் புற்று நோய்க்கு சிகிச்சை முறையைக் கண்டுபிடித்திருக்கிறான். பொதுவாக அறுவை சிகிச்சை கதிர்வீச்சு மற்றும் கீமோதெரபி ஆகியவை அடங்கிய கூட்டு மருத்துவ முறையில் தான் இதற்கு சிகிச்சை அளிக்க முடியும். இந்த வகை புற்று நோய்க்குக் காரணமாக உள்ள ஐடி 4 புரதத்தை உருவாக்கும் மரபணுக்களை அழிப்பதற்கான வழி முறையைக் கண்டுபிடித்து இருக்கிறான். ஏற்கனவே மன நிலை பாதிப்பு நோயை முன் கூட்டியே கண்டறியும் சோதனை முறையைக் கண்டுபிடித்ததற்காக கடந்த ஆண்டு கூகுள் அறிவியல் கண்காட்சி விருது இவனுக்கு வழங்கப்பட்டுள்ளது.0626_celeb100-jackie-chan_1200x675

ஹாங்காங்கைச் சேர்ந்த நடிகர் ஜாக்கி சான்   இவருக்கு வாழ் நாள் சாதனையாளர் ஆஸ்கர் விருது வழங்கப்பட உள்ளது. தற்காப்புக் கலை நகைச்சுவை கலந்த சண்டைக்காட்சிகளால் உலகைக் கவர்ந்தவர். டிராகன் லார்டு  போலீஸ் ஸ்டோரி  சூப்பர் காப்  பர்பி டன் கிங்டம்  ஹூ எம் ஐ   தி மித்   ஷாங்காய் நைட்ச் தி கராத்தே கிட் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.download

ஹவாய் தீவுகளின் வடமேற்கு கடல் பரப்பில் கடல் வாழ உயிரினங்களுக்கான பாதுகாக்கப்பட்ட பகுதி பபஹனோ மோகுவாகி என்ற இடம் மிகப் பழமையான பவளப்பாறைகள் உள்ளிட்ட 7000 க்கும் மேற்பட்ட அரியவகை கடல்சார் உயிரினங்கள் மற்றும் கடல் வளங்களைக் கொண்ட பகுதி இது. தேசிய நினைவுச் சின்னமாக அமெரிக்கா பராமரித்து வரும் இப்பகுதியை அதிபர் ஒபாமா விரிவாக்கம் செய்வதாக அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அரியவகை மீன் ஒன்றுக்கு ஒபாமாவின் பெயர் சூட்டப்பட உள்ளது. 300 அடி ஆழத்தில் கடந்த ஜூன் மாதம் இந்த மீன் கண்டுபிடிக்கப்பட்டது.bosphorus_bridge-1

துருக்கியின் மேற்குப் பகுதி ஐரோப்பாவிலும் கிழக்குப் பகுதி ஆசியாவிலும் இருப்பதால் இந்த இரு கண்டங்களையும் இணைக்கும் வகையில் துருக்கி இஸ்தான்புல் நகரில் புதிய தொங்குபாலம் கட்டப்பட்டுள்ளது. 1.4 கிமீ நீளம் 59 மீட்டர் அகலம் 322 மீட்டர் உயரம் கொண்ட இதில் 8 வழிச்சாலைகள் 2 இரயில் பாதைகள் அமைக்கப்பட உள்ளன. இதன்மூலம் ஒருங்கிணைந்த சாலை ரயில் பாதை கொண்ட உலகின் மிகப்பெரிய பாலம் என்ற பெருமை பெற்றுள்ளது.world

இந்தோனேசியாவில் மத்திய ஜாவா பகுதி ராகன் நகரைச் சேர்ந்த இம்பா கோத்தாதான் உலகின் மிக வயதான மனிதர்  அவருடைய வயது 145.  கோத்தா தாத்தா 1870 டிசம்பர் 31ம் தேதி பிறந்தார். இதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகளாவிய அளவில் ஏற்கப்படும் போது இவ்வுலகில் நீண்ட நாள் வாழும் மனிதர் என்ற பெருமையைப் பெறுவார்.   நான்கு முறை திருமணம் செய்துள்ள இவருக்கு 10 பிள்ளைகள் பிறந்துள்ளனர். ஆனால் மனைவிகளோ பிள்ளைகளோ யாரும் இப்போது உயிருடன் இல்லை. பேரப்பிள்ளைகளும் கொள்ளு எள்ளு பேரப்பிள்ளைகளும் உள்ளனர். பேரப்பிள்ளைகளில் ஒருவரான சூரியாந்தோ  கடந்த சில ஆண்டுகளாகத்தான் தாத்தாவுக்கு முதுமை அதிகரித்துள்ளதாகவும் அவர் இப்போதும் ஆரோக்கியமாகவே இருப்பதாகவும் கூறுகிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s