ஆரோக்கியத்துக்கு உகந்த கறிவேப்பிலை

p34

கறிவேப்பிலையில் அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. நிறைய கறிவேப்பிலையை எடுத்துக்கொண்டு நன்றாக நீரில் அலசி சுத்தம் செய்யவும். தண்ணீர் வடிந்தவுடன் நிழல் உலர்ந்தலாக உலர்த்தவும்.  மைக்ரோ அவன் இருந்தால் அதில் 5 நிமிடம் பரவலாக வைத்து எடுத்தால் பச்சை நிறம் மாறாமல் உலர்ந்துவிடும். அதை வெறும் வாணலியில் சிறிது நேரம் புரட்டி எடுத்து அதனுடன் சிறிது மிளகு உப்பு பெருங்காயம் சேர்த்து பொடி பண்ணவும். இந்தப் பொடியை காலை வேளையில் மோரில் ஒரு ஸ்பூன் போட்டு குடிக்கலாம். காலை வேளையில் ஒட்ஸ் கஞ்சி கம்பு  கேழ்வரகு கஞ்சி குடிப்பவர்கள் அதில் இந்தப் பொடியைப் போட்டுக் குடிக்கலாம். நல்ல மணமாக இருக்கும்curry-powder1

பகல் வேளை உணவின் போது சூடான சாதத்தில் இந்தப் பொடியைப் போட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிடலாம். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ளௌம் இட்லி மிளகாய் பொடியுடன் இந்தப் பொடியை கலந்தும் சாப்பிடலாம். கறிவேப்பிலையில் இரும்புச்சத்து கால்சியம் வைட்டமின் எல்லாம் இருக்கிறது. தலைமுடியும் நன்றாக வளரும். உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. கறிவேப்பிலையில் நார்ச்சத்து புரதச்சத்து தாது உப்புக்கள் மக்னீசியம் இரும்புச்சத்து தாமிரசத்து கந்தகச்சத்து போன்றவை உள்ளன. கறிவேப்பிலை பொடியைச் சாப்பிடும்போது அஜீரணக்கோளாறுகல் நீங்கி கொழுப்பு கரையும்   சருமத்துக்கும் நல்லது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s