ஆஹா ஆலயம்

durga3

கர்னாடக மானிலத்தில் மங்களூரு மாவட்டத்தில் கட்டீல் என்ற ஊரில் துர்க்கா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் உள்ளது. நேத்ராவதி நதியில் அம்மன் கொலுவிருப்பதால் கர்ப்பகிரகம் ஈரமாக இருப்பதுடன் பிரசாத குங்குமமும் ஈரமாக இருக்கிறது. இரண்டாகப் பிரிந்து மாலை அணிவித்தது போன்று சுற்றி ஓடுகிறது. சொத்துப் பிரச்னைகள் தீர வெப்ப நோய் நீங்க இங்கு வழிபாடு செய்கிறார்கள்.9931039344_c28cd28f84

கும்பகோணத்திலிருந்து 16 கிமீ தொலைவில் இருப்பது கஞ்சனூர். கேட்டதைத் தரும் கற்பக விருட்சமாக கற்பகாம்பாளும் அள்ளிக்கொடுக்கும் அக்னீஸ்வரரும்கோயில் கொண்டிருக்கும் அற்புத தலம். நம்முடைய துன்பத்தைப் போக்கி சுகத்தை அருளும் சுக்கிர பகவானும் இவ்வாலயத்தில்தான் குடிகொண்டிருக்கிறார். ஆறாவது கிரகமான சுக்கிரனின் ஸ்தலம் கஞ்சனூர். பிரம்ம தேவரின் புத்திரன் பிருகு முனிவரின் குமாரன் சுக்கிரன். வேலை வாய்ப்பு தொழில் முன்னேற்றம் நல்ல இடத்தில் திருமணம் வசதி வாய்ப்புடன் கூடிய வாழ்க்கை இலக்கியம் மற்றும் கவிதை எழுதும் ஆற்றல் ஆகியவற்றை அருளும் அருளாளர் சுக்கிரன்.02-02-16-04-20-15-0

மேட்டூர் அணை நீர் தேக்கப்பகுதியில் வீரபத்திர சுவாமி கோயில் இருந்தது. மேட்டூர் அணை கட்டுவதற்கு முன்பாக அங்கே வசித்து வந்த மக்கள் அந்தக் கோயிலில் வழிபட்டு வந்தனர். மேட்டூர் அணை கட்டியவுடன் வேறொரு இடத்துக்கு மாற்றினர். அப்போது அங்கிருந்த மக்கள் வீரபத்திர லிங்கத்தை எடுத்து வந்தனர். சற்று தூரம் வந்ததும் இளைப்பாறுவதற்காக லிங்கத்தை இறக்கி வைத்தனர். சற்று நேரத்தில் லிங்கத்தை தூக்க முயன்றனர். தூக்க முடியவில்லை. அந்த இடத்தில் ஒரு கோயிலைக் கட்டி நீலகண்டேஸ்வ்ரர் என்ற பெயரில் வழிபட்டு வருகின்றனர்.pito

மொரீஷியஸ் நாட்டின் கார்பஸ்கார்டே  என்ற மலையிலுள்ள முருகன் கோவில் மொரீஷியஸ் தமிழர்களின் படைவீடாகக் கருதப்படுகிறது. அங்கு அவினாசிப்பட்டு ஆறுமுக ஸ்வாமி விருத்தம் முருகன் பாமாலை போன்ற பாடல்களைப் பாடுபவர்கல் பாடுவதை நிறுத்தும்போது ஹரஹரா என்று கோஷம் இடுவது ஆலயம் செல்லும் வழி நெடுக ஒலிக்கும்.p96a

தஞ்சைமாவட்டம் பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் வழியில் திருச்சிற்றம் வயல் வெளியில் தனி இடத்தில் பழமை வாய்ந்த வினாயகர் கோயில் உள்ளது. இவரது செவியில் உள்ள துவாரங்களில் நமது வேண்டுதல்களை நினைத்து வைக்கப்படும் பூக்களை இந்த வினாயகர் உள்ளே இழுத்துக்கொண்டால் நமது வேண்டுதல் நிறைவேறும். நினைத்த காரியம் கைகூடும். இக்கோயிலை பூ விழுங்கும் வினாயகர் கோயில் என அழைக்கிறார்கள்.tamil

மதுரைக்கு அருகிலுள்ள திடியன்மலை கைலாச நாதர் ஆலயத்திலுள்ள தட்சிணாமூர்த்தி நந்தி மீது அமர்ந்த கோலத்தில் பதினான்கு சித்தர்களுடன் காட்சி தருகிறார். பொதுவாக முனிவர்களுடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் தட்சிணாமூர்த்தி இங்கு வித்தியாசமான கோலத்தில் அருள் புரிகிறார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s