வாழை இலை மகத்துவம்

download

தமிழர்களுடைய கலாசாரத்தில் முக்கியப் பங்கு வாழை இலைக்கு உண்டு. சுபகாரியங்கல் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழ் தலைவாழை இலையைப் போட்டு அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழக்கம். இதை தமிழர்கல் பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள்.

வாழையை உடனே வெட்டி எடுக்கலாம். வாழைக்குலை எடுக்கலாம். வாழை மரத்தால் பயன்கள் அதிகம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும் உடல் நலம் பெறும். மந்தம் வலிமைக்குறைவு இளைப்பு  போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும்.images

வாழை இலையில் சாப்பிடுவதால் இள நரை வராமல் நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. வாழை இலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை உணவை எளிதில் ஜீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை உடையது. நன்றாக பசியைத் தூண்டும். வாழை இலையில் உண்பவர்கள் நோயின்ரி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.

அலுவலகம் செல்லும் அதிகாரிகல் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கல் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. இதில் பொதிந்து எடுத்துச் செல்லும்போது உணவு நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும்.sadya-banana-leaf

கல்யாண வீடுகள் பொதுவிழாக்கள் அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதற்கு வாழை இலைகள்தான் பெரிதும் பயன்படுகின்றன. சாப்பிட்டவுடன் உடனே எறிந்து விடலாம். எல்லோருக்கும் சுலபம் விலையும் குறைவு. தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும் தீக்காயமடைந்தவர்களையும் வாழை இலையின் மீது படுக்கவைத்தால் அதில் உள்ள பச்சைத்தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். வாழை இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து இரண்டு நாட்கள்  கட்டவேண்டும். அதன் பின்னர் இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த இரண்டு நாட்கள் சுட்ட புண் ஆறும்.

 

பதிவுலக அன்பர்கள் அனைவருக்கும் எங்களின் ஓணம் நல்வாழ்த்துக்கள்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s