திருவலஞ்சுழி பிள்ளையார்  

tiruvalanculi6

கும்பகோணத்திலிருந்து எட்டு கிமீ தூரத்தில் உள்ள திருவலஞ்சுழியில் அமைந்துள்ள பிள்ளையார் பல விசேஷங்களுக்குச் சொந்தக்காரர்.  இங்குள்ள வெள்ளைப் பிள்ளையாருக்கு தைலம் பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகங்கள் கிடையாது. அதனால் தீண்டாத திருமேனி என்ற சிறப்புப் பெயர் பெற்றவர்.thiruvalanchuli-1

கமகமவென்று மணம் வீசும் பச்சைக்கற்பூரத்தை அம்மியில் வைத்துக் குழவியால் பொடியாக்கி பிள்ளையார் மீது பூ மாதிரி தூவுகிறார்கள். ஹிரித்வரன் என்ற மன்னன் இந்தப் பகுதியை ஆண்டபோது “ அதென்ன பச்சைக் கற்பூரம் மட்டும்? நான் சந்தனம் கொண்டு வந்திருக்கிறேன். சந்தனக்காப்பு செய்யுங்கள் ‘ என்றான். அர்ச்சகர் மன்னா இவர் கடல் நுரையினால் ஆனவர். தீண்டப்பெறாத அவர் திருமேனியைத் தொட்டு சந்தனம் சார்த்துதல் அபசாரம் என்றவுடன் மன்னன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான். அப்போது ஒரு அசரீரி “ மன்னா எதிர்காலத்திலும் யாரும் இப்பிழை செய்யாதிருக்க ஒரு மண்டபத்தைக் கட்டுவாயாக   நீ செய்த பிழையை மனத்தில் கொண்டு அபராத மண்டபம் என்று அழைக்கப்பட வேண்டும்” என்று கூறியது.g_t2_664

சில நாழிகை நேரம்தான் இருந்ததால் கிடைத்த வெவ்வேறு வடிவ கற்களை வைத்து அசுர வேகத்தில் அரைகுறையான மண்டபத்தை எழுப்பி விட்டான் மன்னன். இன்றும் அபராத மண்டபத்தில் கற்கல் ஒழுங்கு இல்லாமலிருப்பதைக் காணலாம். சூரிய பகவானும் சனிபகவானும் நேருக்கு நேர் சந்திக்க மாட்டார்கள். இங்குள்ள கபர்தீஸ்வரர் சன்னதியின் வெளிப்பிரகாரத்தில் நேருக்கு  நேர் மித்ரர்களாக அனுக்கிரஹம் செய்கிறார்கள். இது ரொம்ப விசேஷமானது.

திருமணத்தடை பிரிந்த தம்பதி ஒன்று சேர என எல்லாப் பிரச்னைகளையும் தீர்க்கவல்ல பிரசித்தமான தலம் திருவலஞ்சுழி.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s