மனம் கலங்காதிருக்க

 

தகப்பனே கொலை செய்ய முயற்சித்த போதும் ப்ரஹலாதன் மனம் கலங்கவில்லைsahambari

சுடுகாட்டு வெட்டியானுக்கு அடிமையாக்கியபோதும் ராஜா அரிசந்திரன் மனம் கலங்கவில்லை

பெற்ற பிள்ளையே கேவலப்படுத்திய போதிலும் கைகேயி மனம் கலங்கவில்லை

உறவினர்களே சபை நடுவெ அசிங்கப்படுத்தியபோதும் விதுரர் மனம் கலங்கவில்லைbeeshmar

அம்புப்படுக்கையில் வீழ்ந்தபோதிலும் பீஷ்மர் மனம் கலங்கவில்லை

இளம் விதவையான சமயத்திலும் குந்தி தேவி மனம் கலங்கவில்லை

தரித்திரனாக வாழ்ந்தபோதும் குசேலர் மனம் கலங்கவில்லை.

ஊனமாகப் பிறந்து ஊர்ந்த போதிலும் கூர்மதாஸர் மனம் கலங்கவில்லை

பிறவிக்குருடனாக இருந்தபோதிலும் சூர்தாஸர் மனம் கலங்கவில்லைdownload-1

,மனைவி அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் மனம் கலங்கவில்லை

கணவன் கஷ்டப்படுத்தியபோதும் குணவதிபாய் மனம் கலங்கவில்லை

இரு கைகளையும் வெட்டிய நிலையிலும் சாருகாதாஸர் மனம் கலங்கவில்லைunnamed

கை கால்களை வெட்டி பாழுங்கிணற்றில் தள்ளியபோதும் ஜயதேவர் மனம் கலங்கவில்லை

மஹா பாபியினிடத்தில் வேலை செய்தபோதும் சஞ்சயன் மனம் கலங்கவில்லை

பெற்ற பிள்ளையை பறிகொடுத்த  போதும் பூந்தானம் மனம் கலங்கவில்லை

கூடப்பிறந்த சகோதரனே படாதபாடு படுத்தியப்போதும் தியாகராஜர் மனம் கலங்கவில்லை

நரசிம்மர் சன்னதியில் விஷ தீர்த்தம் தந்தபோதும் மஹாராஜா ஸ்வாதித் திரு நாள் மனம் கலங்கவில்லை220px-kooreser

சோழ ராஜனின் சபையில் கண்ணை இழந்தபின்னும் கூரத்தாழ்வார் மனம் கலங்கவில்லை

எப்படி முடிந்தது இவர்களால்?  ரகசியம்  தங்களோடு இறைவன் எப்போதும் இருக்கிறான் என்று உணர்ந்ததால்………………..

கடவுள் எப்போதும் கூடவே இருக்கின்றான் என்று உணர வழி

ஆழ்ந்த நம்பிக்கை

அந்த நம்பிக்கை ஏற்பட வழி

முதல் வழி சொல்லறிவு

அறிஞர்கள் ஞானிகள் மற்றும் சான்றோர்களின் கூற்றை மனபூர்வமாக ஏற்று கொள்ளுதல்

இரண்டாம் வழி

சுய அறிவு329-04-50e

மன அமைதியுடன் நடு நிலை உணர்வுடன் ஆழ்ந்த சிந்தனையில் புத்தி பல வகைகளில் ஆய்வு செய்து உண்மை விளங்கும்போது மனம் தெளிவடைந்து அப்போது ஏற்படுவது  நம்பிக்கை ஏற்பட்டபின் மனம் செல்ல வேண்டிய பாதையில் சரியாக சென்று  உடல் மற்றும் மன ஆற்றலை பெருக்கி கொள்ளும் பயிற்சியாக தொடர்ந்து செய்யப்படும் பிரார்த்தனை முறைகள்.saints

அந்த பிரார்த்தனைகள் மந்திரமாக இருக்கலாம் ஜபமாக இருக்கலாம் தொழுகையாக இருக்கலாம் கீர்த்தனையாக இருக்கலாம். மேலும் அனைத்திற்கும் அடிப்படையாக விளங்கும் அன்பும் அறநெறியும் உண்மையும் சத்தியமும் நியாய தர்மங்கலை காக்கும் பண்புகளாகவும் இருக்கலாம்  இவைகளை மாறாமல் கடைப்பிடித்தால் வாழ்வில் தோன்றும் எந்த சங்கடங்களையும் எளிதில் கடக்கலாம்.10_2839420f

என்ன நடந்தாலும் எதை இழந்தாலும் ஆத்ம திருப்தியுடன் செய்யும் செயல்களே ஆத்ம பலத்தைத் தரும். அந்த ஆத்மபலமே எதையும் தாங்கும் சக்தி அதனால் விடாமல் நாம ஜபம் செய்வோம்  தொடர்ந்து தொழுகை செய்வோம். திடமாக பகவானை வழிபடுவோம். அன்பே கடவுள் என போற்றுவோம். உறுதியுடன் உண்மையாக இருப்போம்.இதனால் பெற்றிடுவோம் மன அமைதியும் அர்த்தமுள்ள வாழ்க்கையையும்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s