புகழ் பெற்ற புகைப்படம்

subrama

பாரதியார் மனைவி செல்லம்மாவோடு இணைந்து நின்று காட்சி தரும் இந்தப் புகைப்படம் விழுப்புரத்தைச் சேர்ந்த கிருஷ்ணராஜூ என்பவர் எடுத்தது. புதுச்சேரியில் பாரதியார் வசித்தபோது எடுத்த  புகைப்படம் இது.  பாரதியின் இடது கரம் மனைவியின் தோள் மீது படர்ந்திருக்கும் இந்தப் புகைப்படம் பாரதியார் இவ்வுலகை விட்டு மறைவதற்கு நாலு வருடங்களுக்கு முன்பு எடுத்ததாகும்.subramania

புதுச்சேரியில் மகாகவி பாரதியார் 1908 முதல் பத்து ஆண்டுகள் வசித்தார். அப்போது அவர் படைத்ததே குயில் பாட்டு,  கண்ணன் என் காதலன், பாஞ்சாலி சபதம், ஓடி விளையாடு பாப்பா  என்ற புகழ்பெற்ற கவிதைகள். புதுச்சேரி மணக்குள வினாயகர்ப் போற்றித் துதித்து வினாயகர் நான்மணி மாலை இயற்றினார். அவர் புதுச்சேரியில் இருந்தபோது காளி தாசரின் சகுந்தலை காவியத்தைப் படித்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில் பிறந்த தன் மகளுக்கு சகுந்தலா என்று பெயர் சூட்டினார்.

1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 பாரதியார் அமரரானார். சுதேச மித்திரன் நாளிதழில் செப்டம்பர் 12 ஆம் தேதி அந்தச் செய்தி இப்படி வெளியானது. தமிழ் நாடு போற்றும் ஸ்ரீசுப்ரமணிய பாரதியார் இவ்வுலக வாழ்வை  நேற்றிரவு துறந்து விண்ணவர்க்கு விருந்தாகிவிட்டார் என்ற செய்தியை அறிவிக்க நமது மனம் பதறுகிறது.  சில தினங்களாக நோயினால் வருந்திக் கொண்டிருந்த அவரை மறுபடியும் ஸ்தூல சரீரத்தில் பார்க்கப் போகிறதில்லை என்று நாம்  நினைக்கவில்லை. திங்கட்கிழமையன்று மித்திரன் வேலைக்கு வந்து விடுவதாகச் சொல்லி அனுப்பிய அவர் திங்கட்கிழமை சாம்பலாகிவிட்டது என்ன கொடுமை/

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s