நியூ[ஸ்]மார்ட்

slogpic

அமெரிக்க தேர்தலில் மூன்று இந்திய வம்சாவளி பெண்கள் எம் பி பதவிக்காகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜன நாயகக் கட்சி சார்பில் வாஷிங்டன் சியாட்டில் பிரமிளா ஜெய்பால் என்பவர் நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுகிறார். இவர் சென்னையில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்.7e

இதே கட்சியின் சார்பில் தற்போது கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜெனரலாக இருக்கும் கமலா ஹாரிள் என்பவர் போட்டியிடுகிறார். இவரது தாயார் சியாமளா கோபாலன் சென்னையில் இருந்து அமெரிக்காவில் குடியேறியவர். இவர் வென்றால் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி பெண் என்ற பெருமை கிடைக்கும்getphoto

புளோரிடாவில் இருந்து குடியரசு கட்சி சார்பில் லத்திகா மேரி தாமஸ் என்பவர் போட்டியிடுகிறார். இவர் கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர்.

MS Subbulakshmi, Vocalist (USED-IT 27/12/2004)

இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டும் எம் எஸ் சுப்புலட்சுமி அவர்களின் நூற்றாண்டு மற்றும் அவர் ஐக்கிய நாடுகள் சபையில் பாடியதன் 50வது ஆண்டு இவற்றைச் சிறப்பிக்கும் விதமாக அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி வழங்கினார். இதில் பல நாட்டு தூதர்கள் உயர் அதிகாரிகள் சபை உறுப்பினர்கள் ரசிகர்கள் கலந்து கொள்ள எம் எஸ் அவர்களின் பாடல்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியை ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியன் மிஷன் சங்கர நேத்ராலயா உதவியோடு ஏற்பாடு செய்திருந்தது. ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியோடு எம் எஸ் சுப்புலட்சுமியைக் கௌரவிக்கும் வகையில் அவரது புகைப்படங்கள் கொண்ட கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.136158-isro-big

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ நிலவுக்கு அனுப்பிய சந்திராயன் 1  அதன் பணியை முடித்துவிட்டது. அடுத்து சந்திராயன் 2 வருகிற 2017 ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2018 ம் ஆண்டின் தொடக்கத்தில் நிலவில் இறங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு ரோபோ மூலம் நிலவின் மண் எடுத்து ரோபோவில் உள்ள பரிசோதனைக்கூடத்தில் ஆராய்ச்சி நடத்தப்படும். பிற நாடுகளின் உதவி இல்லாமல் ஜி எஸ் எல் வி ராக்கெட் மூலம் இந்தச் செயற்கைக் கோளை இந்தியாவே விண்ணில் செலுத்த உள்ளது. பின்னர் சூரியனைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக ஆதித்யா செயற்கைக்கோள் 2019 ம் ஆண்டு விண்ணில் ஏவப்படும்.  கடந்த ஒரு வருடத்தில் 10 செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் பருவ நிலை மாற்றங்கள் செய்தி பரிமாற்றம் போன்றவைக்கு இவை பயன்படும்.download

பிரான்ஸ் நாட்டின் கௌரவம்  மிக்க செவாலியே விருது இம்முறை உலக நாயகன் கமலஹாசனுக்கு வழங்கப்பட இருக்கிறது. கலை மற்றும் இலக்கியத்துறையில் சிறந்த பங்காற்றி வருபவர்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இதில் திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் முதல் தமிழ் நடிகராக சிவாஜி கணேசன் இந்த விருதைப் பெற்றார். பின்னர் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா  அமிதாப்பச்சன் ஐஸ்வர்யாராய்  நந்திதாதாச் போன்றோரும் பெற்றுள்ளனர். இந்த விருது பிரான்ஸ் நாட்டின் கலாச்சார மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. logo

மறைந்த அன்னை தெரஸாவுக்கு செப்டெம்பர் மாதம் நாலாம் தேதி அன்ரு புனிதர் பட்டத்தினை வாடிகன் நகரில் போப் ஆண்டவர் வழங்க இருக்கிறார். அதற்கான சர்வதேச அளவிலான லோகோவை மும்பையைச் சேர்ந்த சுரேன் வாஸ்வாணி என்ற பெண்மணி வடிவமைத்திருக்கிறார். 44 வயதாகும் இவர் ஒரு கிராஃபிக் டிசைனர். அன்னை தெரசா ஒரு குழந்தையைக் கையிலேந்தி கருணையுடன் பார்க்கும் இந்த லோகோ வாடிகன் நகரில் உள்ளவர்களால் தேர்வுசெய்யப்பட்டு இருப்பதிலும் உலக அளவில் எல்லா மீடியாக்களிலும் இந்த லோகோதான் வரும் என்பதிலும் இவருக்கு மிகுந்த மகிழ்ச்சி

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s