வெளி நாட்டில் வினாயகர் வழிபாடு 1

japan

ஜப்பானில் புத்தமத கடவுளுடன் வினாயகர் சிலையும் வைக்கப்பட்டுள்ளது.  இவரை வினாயக்ஷா என்ற பெயரில் அழைக்கின்றனர். இவரை திசைகளின் காவலராக  கோயில்களில் நான்கு திசைகளிலும் அமைத்து வழிபடுகின்றனர்.greece

கிரீஸ் நாட்டில் சாலைகளில் மைல்கற்கள் வினாயகர் வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. வினாயகர் நல்வழி காட்டி மக்களை அவர்கள் இலக்கை அடைய உதவுவதாக இதன் மூலம் நம்புகின்றனர்.srilanka

இலங்கை கதிர்காமத்தில் முறிவண்டி வினாயகர் கோயில் உள்ளது. இந்தக் கோயில் வழியாக தங்கள் வாகனங்களில் செல்பவர்கல் இறங்கி இவரை வழிபட்ட பிறகே செல்கின்றனர். ஒரு காலத்தில் மாட்டு வண்டியில் செல்லும்போது இவரை வணங்காமல் சென்றால் வண்டியின் அச்சு முறிந்துவிடும் என்ற நிலை இருந்தது. இப்போதும் அந்த நம்பிக்கையே நிலவுகிறது.combodia

கம்போடியாவில் சோக்குங் என்ற இடத்தில் சந்தனப்பிள்ளையார் கோயில் உள்ளது. இங்கு உள்ள பிள்ளையார் கையில் ஒரு தந்தமும் முக்கண்ணும் உடையவராய் பூணூல் அணிந்து கமண்டலம் திருவோடு ஆகியவற்றுடன் காட்சியளிக்கிறார். இந்து வினாயகரை ப்ராஹ்கணேஷ் என்று அழைக்கின்றனர்.gw-china

சீனாவில் வினாயகரை குவன்ஹீடியிக் என அழைக்கின்றனர். இவரை சிலை வடிவிலும் யந்திர வடிவிலும் வழிபடுகின்றனர்.  மிகப் பழைய வினாயகர் உருவம் டூங்கூரங் என்ற ஊரில் உள்ள கோயிலில் உள்ளது. கோட்டான் என்ற ஊரில் உள்ள கோயிலில் வினாயகர் முழங்கால் அளவு கால் சட்டையும் புலித்தோலும் அணிந்து கீரீடம் முத்துமாலை தரித்து காட்சியளிக்கிறார்.tibetianganpati

திபெத் நாட்டில் வினாயகரை அம்மனாககருதி கமேசாயினி என்ற பெயரில் வழிபடுகின்றனர். புத்தர் சிலை அருகே வினாயகர் சிலையையும் வடித்துள்ளனர்.  நடனக் கோலத்திலும் இருக்கிறார். நெற்றியில் பிறை சந்திரன் வடிவில் திலகம் இடுகின்றனர். கோயில்களில் வாசல் அருகில் காவல் தெய்வமாக வைத்துள்ளனர்.java

ஜாவா நாட்டில் வினாயகரைக் கல்விக் கடவுளாக வழிபடுகின்றனர். இங்குள்ள வினாயகருக்கு தந்தங்கள் உடையாமல் முழுமையாக உள்ளன.  ஆற்றங்கரைகளிலும் வினாயகர் சிலைகள் காணப்படுகின்றன.rome

ரோம் நாட்டில் ஜேன்ஸ் என்ற ஜனவரி மாதக்கடவுளையே வினாயகராக நினைத்து வழிபடுகின்றனர்.  இவருக்கு ஒன்று மனித முகமாகவும் மற்றொன்று யானை முகமாகவும் இரு முகங்கள் உள்ளன. இவர் கையில் சாவி உள்ளது. இதனால் இவரே சொர்க்கத்தின் வாயிலை திறப்பார் என நம்புகின்றனர். இவரை விவசாய தெய்வமாகவும் வழிபடுகின்றனர்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s