வித விதமான கணபதி வழிபாடு

 

ஓம்காரனாக விளங்கும் வினாயகனை இந்திய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள்.khairatabad-ganesh-2016

ஆந்திராவில் குழந்தைகளுக்குப் புதிய துணிமணிகள் எடுத்து ஆண் குழந்தைகளையே பூஜையும் செய்வித்து மகிழ்கிறார்கள்.vijayaka-desibantu

ஒரிசாவில் புத்தகங்களை வைத்துப் பூஜை செய்து புத்தாடை அணிந்து விருந்துண்டு மகிழ்கின்றனர்.ganesh_chaturthi_1

மகாராஷ்டிராவைப் பொறுத்தவரை அது மானிலத்திருவிழா ஆகும். கணபதி பப்பா மோரியா என்ற வாசகம் பல நாள் வரை காதில் ஒலிக்கும். கணபதி உற்சவம் 10 நாட்கள் நடைபெறும். லால்பாக் எனுமிடத்தில் அமையும் பந்தலில் வினாயகரை லால்பாக்கி ராஜா என்று அழைக்கிறார்கள். அங்கு தங்கத்தால் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளும் வெள்ளியால் செய்யப்பட்ட மூஞ்சூறுகளும் சர்வசாதாரணமாக உண்டியலை நிரப்புகின்றனர்.gowri-festival-01

கர்னாடகத்தில் முதல் நாள் கவுரி பூஜை செய்து மறு நாள் வினாயகர் பூஜை செய்கின்றனர்.  அங்கு சொல்லும்போதே கவுரி கணேசா என்றுதான் சொல்லுவார்கள்.happy-teej-2015

உத்திரப்பிரதேசத்தில் சதுர்த்திக்கு முதல் நாளை தீஜ் என்று விரதமிருந்து சிவசக்தி வழிபாட்டைச் செய்கின்றனர்.2

பீகாரில் ஒரு பகுதியினர் சதுர்த்தியில் நாள் முழுவதும் விரதமிருந்து மாலையில் உதயமாகும் சந்திரன் முன் குஜியா [ சோமாசி போன்றது ] இனிப்புப் பூரி பால் பாயசம் பருப்பு பூரி  பழ வகைகளைப் படைத்து பூஜை செய்கின்றனர்.download

மணிப்பூரில் மைரி என்னும்  மக்கள் மூங்கில் அரிசியை கணபதிக்கு நிவேதனம் செய்து வழிபடுகிறார்கள்.12

குஜராத்  குகைக் கோயிலிலுள்ள கணேசரை ஜைனர்களும் வணகுகின்றனர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s