மாவீரன் திப்பு சுல்தான்

tippu-sultan

வெள்ளையரை எதிர்த்து நாட்டுக்காக உயிர் நீத்த வீரன் திப்பு சுல்தான். தன் ஆட்சி காலத்தில் பல இந்து கோவில்களுக்கு கொடையும் காணிக்கையும் அளித்தார். கஜினி முகமது மற்றும் கோரி முகமது போன்ற அன்னிய நாட்டு முஸ்லீம் அரசர்கள் நம் நாட்டு கோவில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த சரித்திர களங்கத்தை துடைக்க தன்னால் ஆனமட்டும் இந்துக் கோயில்களுக்காக பல பணிகளை செய்தார் திப்பு சுல்தான்.

மைசூரை அடுத்த ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்க நாதர் ஆலயத்தில் பிரசாதம் வைக்கும் ஏழு வெள்ளீப் பாத்திரங்களில் திப்புவின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளன. பல தீப தட்டுக்களும் ஊதுபத்தி ஸ்டாண்டுகளும் அவனது பெயரால் வழங்கப்பட்டு இன்றும் அவை ஆலய உபயோகத்தில் உள்ளன.img-20160506-wa0000

மைசூருக்கு மேற்கே மேல்கோட்டை எனும் ஊரில் உள்ள நரசிம்மர் கோவிலுக்கு 1786 ல் பெரிய தோல் முரசு ஒன்றைக் கொடுத்து அம்முரசில் இது திப்பு வழங்கியதற்கான சான்று பட்டயம் பாரசீக மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மற்றொரு ஆலயமான நாராயணசுவாமி கோவிலுக்கு பல வெள்ளி தாம்பாளங்களும் தங்கம் மற்றும் வெள்ளீயால் ஆன ஆராதனை பொருட்களும் வழங்கியுள்ளார்.tippusultan

நஞ்சன் கூடு என்ற ஊரில்  நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் மற்றும் திருகாந்தேஸ்வரர் ஆலயம் புகழ் பெற்றவை. நஞ்சுண்டேஸ்வரர் ஆலய மரகதலிங்கம். மரகதம் எனும் நவரத்ன மணியால் ஆனது.  இதை வழங்கியவர் திப்பு சுல்தான். இதற்கு பாதுஷா லிங்கம் என்று பெயர். திருகாந்தேஸ்வரர் சுவாமியின் கழுத்தில் உள்ள பொன்னாரம் பச்சை மரகத கற்களால் பதிக்கப்பட்டு திப்புவால் வழங்கப்பட்டது.  மேல்கோட்டை நாசிம்ம சுவாமி கோவில் பிரகாரத்தின் மேல் தளத்தில் புராண  நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் படங்களுக்கு இடையில் திப்புவின் படமும் அழியா வண்ணத்தில் வரையப் பட்டுள்ளது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s