திருமங்கையாழ்வார்

220px-Thirumangai

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் சோழ நாட்டில் திருவாலி திருநகரி அருகிலுள்ள திருக்குறையலூரில் அவதரித்தவர் திருமங்கையாழ்வார். திருமாலின் சார்ங்கம் என்னும் வில்லின் அம்சமாகப் பிறந்தவர் இவர் கரிய நிறம் கொண்டவராக இருந்ததால் நீலன் என பெற்றோர் பெயரிட்டனர்.  போரிடுவதில் எதிரிக்கு எமனாக இருந்ததால் பரகாலன் எனப் போற்றப்பட்டார். திருமங்கை நாட்டிற்கு மன்னராக இருந்ததால் திருமங்கைமன்னன் என்று பெயர் பெற்றார்.

திருவெள்ளக்குளத்தில் பிறந்த குமுதவல்லியை மணந்தார். திருநறையூர் நம்பியிடம் தீட்சை பெற்றார். மனைவியின் விருப்பத்திற்காக ஓராண்டு காலம் தினமும் 1008 அடியார்களுக்கு உணவிட்டார். தன் செல்வம் முழுவதையும் இழந்த பின் வழிப்பறியில் ஈடுபட்டு தொண்டு செய்தார். திருமாலே நேரில் வந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து அருள் புரிந்தார். ஆசுகவி  மதுரகவி சித்ரகவி விஸ்தாரகவி2761

என்னும் நாலு கவியும் பாடுவதில் வல்லவர் என்பதால் நாலுகவிப்பெருமாள் எனப்பட்டார். சம்பந்தருடன் வாதம் செய்து அவரிடம் வேலினை பரிசாகப் பெற்றதால் கொற்றவேல் பரகாலன் என்று பெயர் பெற்றார். ஸ்ரீரங்கம் கோயிலில் பல திருப்பணிகளை செய்தார்.

108 ல் 87 திவ்ய தேசங்கள் பற்றி பாசுரம் பாடியுள்ளார். இவர் ஆராதனை செய்த நரசிம்மர் திருவாலி திருநகரியில் இப்போதும் உள்ளார். ஆண்டுதோறும் நம்மாழ்வார் விக்ரஹத்தை ஆழ்வார்திருநகரியில் இருந்து ஸ்ரீரங்கத்திர்கு கொண்டு வந்து மார்கழி அத்யயன உற்சவம் நடத்தினார். திருக்குறுங்குடியில் இறுதிக்காலத்தைக் கழித்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s