ஆஹா தகவல்

night

தைவான் நாட்டின் தலை நகரான  நைபே யில் இரவில் இயங்கி வரும் நைட் மார்கெட் உலகப் புகழ் பெற்றது. இரவு முழுக்க எந்தப் பொருளையும் வாங்க முடியும். விடிய விடிய ரோட்டோர உணவகங்களும் நடைபெறுகிறது. இதில் விசேஷம் என்னவென்றால் நாம் விரும்பும் உணவைச் சுடச்சுட சில நிமிடங்களில் சமைத்துக் கொடுப்பார்கள். இந்த நைட் மார்கெட் உயரமான நைபே டவரின் [ 101 மாடி ]அருகில் நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகலை அதிகளவில் ஈர்க்கிறது.download

சைனீஸ் உணவு வகைகளில் சுவைக்காக சேர்க்கப்படும் சுவையூட்டி அஜினோமோட்டோ   மோனோ சோடியம் குளூடாமேட் என்பது இதன் வேதியியல் பெயர்.  இது தக்காளி மற்றும் சீஸ் போன்ற உணவு வகைகளில் இயற்கையாகவே உள்ளது. இந்த உப்பு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள் கரும்பு மற்றும் மரவள்ளிக்கிழங்கு. மொலாசஸை  நொதிக்க வைத்து தயாரிக்கப்படுவதால் உடலுக்குக் கெடுதல் ஒன்றுமில்லை. அளவுக்கு அதிகமான பயன்பாடே தீங்கு விளைவிக்கும். அமெரிக்கன் ஃபுட் பெடரேசன் இந்த உப்பை ஒருவர் ஒரு நாளைக்கு நாலு கிராம் வரை பயன்படுத்தினால் கெடுதல் இல்லை என கூறியுள்ளது.dest_head_img-310

மணாலியிலிருந்து 51 கிலோமீட்டர் தூரத்தில் ரோதங் பாஸ் அமைந்துள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டுக்கு உகந்த இடமாகக் கருதப்படுவதால் இங்கு விளையாட்டு ஆவலர்கள் வருடா வருடம் வந்து செல்வார்கள். இயற்கை எழில் கொஞ்சும் இந்த இடத்தை சுற்றுலாப் பயணிகல் இந்திய ராணுவ அனுமதியுடன் ஏப்ரல் மாதத்திலிருந்து அக்டோபர் மாதம் வரை அனுமதிக்கப்படுவார்கள்.6587125_orig

நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது எண் 8 வடிவத்தில் நடந்தால் உடலுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறது சித்தர்கள் நூல்கள். 8 வடிவில் வடக்கு நோக்கியோ  அல்லது வடக்கிலிருந்து தெற்கு நோக்கியோ 10 முதல் 15 நிமிடங்கள் நடக்கவேண்டும். இதனால் ரத்த அழுத்தம் குறையும். மூட்டுவலி சரியாகும். சர்க்கரை வியாதி நீங்கும். இப்பயிற்சியினால் சிறு நீரகத்தின் பாயின்ட் என்று சொல்லப்படும் குதிகால் அதிக பயன்பெறுகிறது.EPA1807923_Articolo

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2012ல் அமெரிக்காவிலுள்ள யுனிவர்சிட்டி ஆஃப் சௌத் ஃபுளோரிடாவுக்கு வருகை புரிந்தார். அதை நினைவு கூறும் விதத்தில் அவரைக் கௌரவிக்கும் வகையில் 2016—2017 அகாடமிக் வருடம் முதல் இந்திய மாணவர்களில் பட்டப்படிப்பு முடித்த அல்லது முடிக்கும் தறுவாயில் உள்ள மேற்கொண்டு பி எச் டி படிப்பை யு எஸ் எஃப் ல் தொடரப்போகின்ற மாணவர்களுக்குக் குறிப்பிட்ட சில துறைகளில் ஃபெல்லோஷிப் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். அதற்கு ஃபோஸ்ட் கிராஜூவேட் ஃபெல்லோஷிப் அவார்டு என்று பெயர்.Picture.jpg 258

மூளையைப் பயன்படுத்த உதவுவது தாமரை. இதில் வெண்தாமரை செந்தாமரை ஆகாய தாமரை குளங்களில் உள்ள நீரில் காணப்படும். கல் தாமரை மலைகளின் இடுக்கில் உற்பத்தியாவது. இத்தாமரையில் தாமிரச்சத்து அதிகம். கல் தாமரை இலையைத் தூள் செய்து சாம்பலாக்கி நீரில் கரைத்து காய்ச்சினால் சுத்தமான செம்பு கிடைக்குமாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s