பளீர் டிப்ஸ்

images

கடலை பயறு போன்ற தானியங்களை முளைக்கட்டி உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது. முளைகட்டுதலுக்கு வேண்டிய பயறு வகைகளை முதல் நாள் இரவே ஊறவைத்து பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு ஹாட்பேக்கில் போட்டு மூடி வைக்கவும். அடுத்த நாள் காலை திறந்து பார்த்தால் முளைகட்டிய தானியங்கள் ரெடி.garli

இட்லி மாவில் உளுந்து போதாமல் மாவு கெட்டியாக இருந்தால் பச்சை அப்பளங்களை நீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் அரைத்து விட்டு மாய்ல் கலந்து இட்லி சுட்டால் பூ மாதிரி இருக்கும்.1

ஷெல்புகளில் வேப்பிலைகளைப் பரப்பி அதன் மீது பேப்பர் போட்டு பொருட்களை வைத்தால் பூச்சி வராது. 470017402_XS

வாழைக்காயை சமைக்கும்போது மிளகு சீரகம் அதிகமாக சேர்த்துக்கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படாது.download (2)

இட்லி மாவு புளித்துவிட்டால் அதில் கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கலக்கி வையுங்கள்  சிறிது நேரத்தில் தண்ணீர் மாவின் மேல் தெளியும். அதை வடித்து விட்டால் புளிப்பு இருக்காது.c4

கட்டிப்பெருங்காயத்தை சிறு துண்டுகளாக உடைத்து கோதுமை மாவில் புரட்டி ஒரு டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் ஒன்றோடொன்று ஒட்டிக்கொள்ளாமல் எளிதில் எடுத்துப் பயன்படுத்தலாம்.download (1)

மண்டை வெல்லத்தை உடைப்பது சிரமம். ஒரு சுத்தமான துணியினுள் வெல்லத்தை வைத்து உடைத்தால் வெல்லம் சிதறாமல் இருக்கும்.bitter-gourd-14-1

கடலைப் பருப்பை ஊற வைத்து அரைத்து ஆவியில் வேக வைத்து உதிர்க்கவும். அதை வழக்கமாகச் செய்யும் பாகற்காய் பொரியலில் சேர்த்துக்கிளறினால் பாகற்காயின் கசப்பு குறைந்து விடும்.panam kilangku

பனங்கிழங்கை வேகவைக்கும் முன் வெறும் பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சிறிது உப்பு போட்டு அது வெடிக்கும் வரை வறுத்துப் பின்பு தண்ணீர் ஊற்றிக் கொதித்ததும் கிழங்கைப் போட கிழங்கு விரைவில் வெந்துவிடும்.download

முட்டையை வேகவைத்து துண்டுகளாக்கி மசாலா சேர்த்து ஃப்ரை செய்தால் சுவையாக இருக்கும்.DSC00894

பீர்க்கங்காய்த் தோலுடன் புளி உப்பு மிளகாய் வேர்க்கடலை [ வறுத்தது ] சேர்த்து அரைத்து கடுகு தாளித்து சட்னி செய்யலாம்.400x400

கறிவேப்பிலையை வறுத்துப்பொடி செய்து எண்ணெய் உப்பு சேர்த்து சாதத்தில் கலந்து சாப்பிட்டு வந்தால் கூந்தல் வளரும். கண் பார்வை பொலிவு பெறும்.semya

சர்க்கரை வெல்லப்பாகு செய்யும்போது பதம் வந்தவுடன் எலுமிச்சைச் சாறு விட்டால் பாகும் முறியாது  அழுக்கையும் எடுத்துவிடும்.Wheat-Flour-Desi-Atta-

கோதுமையை லேசாக வறுத்து மாவாக அரைத்து காற்றுப்புகாத டப்பாவில் வைத்தால் அதிக நாட்கள் கெட்டுப்போகாது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s