நியூ[ஸ்]மார்ட்

download (1)

போலந்தில் நடைபெற்ற இருபது வயதுக்கு உட்பட்டோருக்கான தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா புதிய உலக சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 86.48 மீட்டர் தூரம் எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப்பதக்கத்தையும் கைப்பற்றினார். இதனால் உலக சாதனை  புரிந்த முதல் இந்திய தடகள வீரர் என்ற பெருமை இவருக்குக் கிடைத்துள்ளது. சிர்மாய்ஸ் என்ற லாட்வியா நாட்டு வீரர் 84.69 மீட்டர் தூரம் வீசியதே. இதுவரை உலக சாதனையாக இருந்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்துள்ளார் நீரஜ் சோப்ரா.tree

3000 வருடங்கள் வயதான ஓர் அபூர்வ மரம் மேற்கு சைனா காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 40 மீட்டர் உயரமும் சுமார் இரண்டு மீட்டர் சுற்றளவும் கொண்டது. ‘ யூ ‘ என்ற இந்த வகையைச் சேர்ந்த மரங்கள். இரண்டரை மில்லியன் வருடங்களுக்கு முன்பாகவே சைனாவின் காடுகளில் அவை இருந்திருக்கவேண்டும் என்றும் காலப்போக்கில் அவை அழிந்துவிட்டன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த மரத்துக்கு தேசியப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.download

இங்கிலாந்தில் புதிதாக ஆரம்பிகப்பட்டிருக்கும் ஒரு உணவு விடுதியில் செல்ஃபோனுக்கு அனுமதி இல்லை ஏன் தெரியுமா? மனிதர்கள் நேருக்கு நேர் பேசுவதை மிகவும் குறைத்து விட்டனர். ஃபோன்களின் மூலமே பேசுகிறார்கள். தொழில் நுட்பத்துக்கு அடிமையாகி தங்கள் இயல்புகளை இழந்து வருகிறார்கள்.  இந்த நிலையை மாற்றுவதற்காகத்தான் இப்படி ஒரு கட்டுப்பாட்டை கொண்டுவந்திருக்கிறோம். நண்பர்கள் உறவினர்களுடனும் வந்து மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்ள வேண்டும். அதனால் செல்ஃபோன் சிக்னல்களை விடுதிக்குள் தடைசெய்திருக்கிறோம். அவசரமாகப் பேச வேண்டும் என்றால் மேஜையில் ஒரு தொலைப்பேசி உண்டு. ஒரு முறை இப்படி சாப்பிட்டபிறகு  அடிக்கடி வருகிறார்கள். ஆரம்பித்த ஒரே மாதத்தில் எங்கள் விடுதி பிரபலமாகிவிட்டது என்கிறார் விடுதியின் நிறுவனர்.

இங்கிலாந்தில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடைபெற்ற குழந்தைகளுக்கான கேள்வி பதில் போட்டியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்து வயது சிறுமி ரியா சாம்பியன் ஆகியிருக்கிறார். இப்போட்டியில் பல சுற்றுகளில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டன. இறுதிப் போட்டிகயில் இங்கிலாந்து சிறுவன் சக்பியை வென்று இங்கிலாந்தின் இங்கிலாந்தின் அறிவார்ந்த குழந்தை என ரிமா தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அதற்கான விருதும் வழங்கப்பட்டது.sddefault

சீனாவின் சோங்க்விங் பகுதியைச் சேர்ந்த லேஷ்ங் டெகரேஷன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம். இலக்கை முடிக்க முடியாத ஊழியர்களுக்கு வாரம்தோறும் பாகற்காய் சாப்பிடும் தண்டனையை அளித்து வருகிறது. முன்பெல்லாம் உட்கார்ந்து எழுந்திருப்பது. அலுவலகத்தை மூன்று முறை வலம்வருவது போன்ற தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன.  இவற்றை ஊழியர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாததால் இந்தப் பாகற்காய் தண்டனையாம். ஆனால் நிர்வாகம் நினைத்தது போல பாகற்காய் தண்டனை பெரிய பலனைக் கொடுக்கவில்லை. 60 சதவிகித ஊழியர்கல் வேலையை விட்டுச் சென்று விட்டனர். தண்டனையை கேள்விப்படும் புதியவர்கள் வேலையில் சேர மறுக்கிறார்களாம்.  indias-

கோவையைச் சேர்ந்த மில்டெக்ஸ் இன்ஜினீயர்ஸ் நிறுவனம் ‘ ஸ்பெரோ இ பைக்  என்னும் பேட்டரியால் ஓடும் பைக்குகளைத் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இ பைக்கினை இயக்கிச் செல்லும்போது பேட்டரியைப் பயன்படுத்தாமல் பெடல் மூலமாக ஓட்டிச் சென்றாலும் பேட்டரியில் தேக்கி வைக்கப்பட்டுள்ளன். மின் ஆற்றல் சேமிக்கப்படுவதோடு பெடல் மூலமாக பைக்கை இயக்கும் போது அதிலிருந்து மின் ஆற்றல் உற்பத்தி செய்து பேட்டரிக்கு கொண்டு செல்லுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அதேபோல் வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் போதும் நிறுத்தும்போதும் பேட்டரியில் இருந்து வெளியே வரும் மின் ஆற்றல் அதிகம் செலவு ஆகாதவாறு திரும்ப பேட்டரிக்குச் சென்று சேமிப்பாகும்.  ரீகிரியேஷன் முறையில் உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் பைக்கை எடுத்துச் சென்று மாடல்கள் தயாராகின்றன.  சார்ஜ் செய்யும்போது ஒரு யூனிட் அளவே மின்சாரம் தேவை. தற்போது இதன் விலை ரூபாய் 30000 முதல் 51000 வரை இருக்கும். வரும் செப்டெம்பர் மாதம் இவை சந்தைக்கு வரலாம்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s