ஆஹா ஆலயம்

Tamil

திருவனந்தபுரம் அருகில் பழம்தண்டி என்ற ஊர் உள்ளது. இங்குள்ள வினாயகரை பழம்தண்டி வினாயகர் என்று அழைக்கிறார்கள். இங்கு காலையிலிருந்து கோயில் சாத்தும் வரை பக்தர்கள் தொடர்ந்து சிதறு தேங்காய் உடைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.nalvazhi

திரு நெல்வேலி மாவட்டம் தென் காசி அருகிலுள்ள கீழப்பாவூர் என்னும் ஊரில் உள்ள ஸ்ரீ நரசிம்ம பெருமாள் திருக்கோவில் சுமார் 1100 ஆண்டுகள் பழைமையானது. இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீ நரசிம்ம பெருமாள் 16 திருக்கரங்களுடன் உள்ளார். அதில் இரண்டு திருக்கரங்களால் தனது மடியில் இரண்யகசிபுவை சம்ஹாரம் செய்தபடி காட்சி தருகிறார்.  ஸ்ரீ நரசிம்மருக்கு எதிரே ஏற்றப்படும் நீர்ஞ்சன தீபத்தைப் பிரார்த்திக்க அனைத்து காரியமும் கைகூடும்.400x400_IMAGE55687054

கரூர் மாவட்டத்தில் திருச்சியிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள கிராமம் நங்கவரம். இங்குள்ள காத்தாயி அம்மன் தனது நாலு கரங்களில் பாம்பு பம்பை சூலம் கபாலம் தாங்கி பீடத்தில் அமர்ந்தபடி அருள்பாலிக்கிறாள்.  தேள் மாலை சூடிய நிலையிலேயே விக்ரகம் அமைந்துள்ளது. இந்த ஊரில் தேள்கள் யாரையும் கடிப்பதில்லி. ஒருவேளை தேள் கொட்டிவிட்டால் அம்மனின் விபூதியை பூசினால் விஷம் உடனே இறங்கிவிடுமாம்.20

கரூரில் இருந்து சின்னதாராபுரம் வழியாக 40 கிமீ தூரத்திலுள்ள பெரிய திருமங்கலம் அருங்கரை அம்மன் கோவிலில் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும். இக்கோவிலுக்குள் பிறந்த பெண் குழந்தையைக் கூட அனுமதிப்பது கிடையாது. ஆனால் வெளியே நின்றபடி வழிபடத்தடையில்லை. இந்த அம்மனை இவ்வூர் ஆண்கள் ஒரு செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் கண்டுபிடித்தனராம். இதன் காரணமாகவே இக்கோவில் செவ்வாய்க்கிழமை மட்டுமே திறக்கப்பட்டு நள்ளிரவு வேளையில் ஆண்களால் பூஜை  நடத்தப்படுகிறது.p156d

தேனி மாவட்டத்தில் உத்தம பாளையம் சண்முகா நதிக்கரையில் காளாத்தீஸ்வரர்  ஞானம்பிகை திருக்கோவில் உள்ளது. இங்கு ராகு கேது அவர்களின் மனைவியருடன் தனித்தனி சன்னதிகளாக எழுந்தருளியிருக்கிறார்கள். அங்கு ராகு கேது பரிகாரம் செய்யப்படுகிறது. இத்தலத்தை தென் காளஹஸ்தி என்பார்கள்.400x400_IMAGE54337886

கேரள மானிலம் திரூர் அருகே உள்ள வெள்ளச்சேரியில் கருடன் காவு ஆலயம் உள்ளது. மூலவர் கருடாழ்வார் இறைக்கைகளை விரித்துப் பறக்கத் தயாரான நிலையில் உள்ளது. சிற்பி ஒருவன் கருடன் சிலையை அற்புதமாகச் செய்து மன்னனுக்கு பரிசளித்தான். உயிரோட்டமான இச்சிலை உண்மையில் பறந்தால் எவ்வளவு சிறப்பு? என்றான் மன்னன். கற்புடைய பெண் தொட்டால் இக்கருடன் உயிர் பெறுவார் என்றார் சிற்பி   கருடன் பறந்தால் கோயில் கட்டுவேன் இல்லை உன் தலை போகும் என்றான் மன்னன்   சிற்பியின் மனைவி சிலையைத் தொட அது உயிர் பெற்று பறந்து சென்று மீண்டும் வந்து அமர்ந்த இடத்தில் மன்னன் கோயில் கட்டினான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s