ஒரே ஆண்டில் மூன்று புத்தாண்டு

images

ஒரே ஆண்டில் மூன்று முறை வருடப்பிறப்பைக் கொண்டாடும் வழக்கம் அஸ்ஸாமியர்களிடம் உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் வாரத்திலிருந்து பிகு என்ற பெயரில் புது வருடத்தை மிகவும் சிறப்பாகக் கொண்டாட ஆரம்பித்து விடுகிறார்கள். தமிழகத்து தாரை தப்பட்டை கேரளத்து செண்டை இசைக் கருவிகளுடன் மிக உல்லாசமாக இந்த ரங்கோலி பிகுவை கொண்டாடுகிறார்கள். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலன்று மரங்களும் பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களும் கனி வகைகளுமாக கண்களுக்கு அஸ்ஸாம் முழுக்க எழிலாகக் காட்சி அளிக்கும்.

அஸ்ஸாமியப் பெண்கள் துணி செய்வதில் கைதேர்ந்தவர்கள்  ஆதலால் தங்கள் வீடுகளிலேயே பாவு போட்டு வண்ண வண்ணத் துண்டுகளை நெய்து தங்களுக்கு வேண்டியவர்களுக்கேல்லாம் ரங்கோலி பிகு வின்போது அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்கிறார்கள்.banner-img1

செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் கங்காலி பிகு என்ற பெயரில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.  காடுகளிலும் வயல்வெளிகளிலும் வேலைக்குப்போயிருக்கும் கணவன் நல்லபடியாக வீடு திரும்ப வேண்டும் என்ற வேண்டுதல் முன்னிறுத்தப்படுகிறது. அன்று பெண்கள் வீட்டில் புதிதாகத் துளசி செடிகள் நட்டு புத்தம் புது அகல்விளக்குகள் ஏற்றி பொங்கலிட்டுப் பூஜை செய்கிறார்கள்.

கிட்டத்தட்ட நம் ஊர் துளசி பூஜை போன்றதுதான் என்றாலும் கூடுதலாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக இருக்கும். அதே நேரம் வயல்களில் ஆண்கள் தீ மூட்டி அக்னி தேவனுக்குப் பொங்கலிட்டு எங்களின் குறையை நீக்கி நிறைவைத் தா என ஆடிப் பாடி நடவை ஆரம்பிப்பார்கள்.Bohag Bihu 2016

ஜனவரி மாதத்தில் புது வருடம் போகாலி பிகு என்று மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. தங்கள் வயல்களிலிருந்து வண்டி வண்டியாக புது நெல் அறுவடையாகி வீடு வந்து சேர்ந்து விட்ட மகிழ்ச்சியில் கொண்டாடப்படும் இத் திருவிழா நம் பொங்கல் திருவிழா போலவே முக்கியமானதாகக் கருதப்படுகிறது. விதவிதமாக இனிப்புப் பண்டனள் தயாரித்து அனைவருக்கும் வழங்கி பத்து நாட்களுக்குக் குறையாமல் தடபுடலாக விருந்துண்டு மகிழ்கிறார்கள்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s