ஆஹா தகவல்

4372811498_b8354028d3_z

சமீபத்தில் தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் நடந்த ஆய்வின்போது ஷ்ப்தார்த்த சிந்தாமணி என்னும் நூல் சுவடி வடிவில் கிடைத்தது. இதை எழுதியவர் சிதம்பர கவி. அந்த நூல் பல கவிதைகளைக் கொண்டது. அந்தக் கவிதைகளை இடமிருந்து வலமாகப் படித்தால் ராமாயணமும் வலமிருந்து இடமாக படித்தால் மஹாபாரதமும் படிக்கலாம். உலகில் இதுபோன்று வேறு எந்த மொழியிலும் நூல் இல்லை என்று கூறப்படுகிறது.jog-falls-01

இந்தியாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சிகளில் இரண்டாம் இடத்தைப் பெறுகிறது. கர்னாடக மானிலத்தின் சிமோகாவில் உள்ள ஜோக் நீர்வீழ்ச்சி பல பகுதிகளைக் கொண்டது. முக்கியமாக ராஜா ராணி ரோரர் ராக்கெட் என்பவை காண்பவர் மனதைக் கொள்ளை கொள்ளும்.  இந்த இயற்கை எழிலைக் கண்டுகளிக்க ஏற்ற மாதங்கள் ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை.peeled-banana

உடலில் மின்சார சிக்னல்களை உருவாக்க பொட்டாசியம் சத்து மிகவும் உதவுகிறது. இதன் குறைபாட்டால் தசை பலவீனம் தசைப்பிடிப்ப்பு இரத்த அழுத்தம் மயக்கம் தலைச்சுற்றல் நெஞ்சு படபடப்பு போன்ற பாதிப்புக்கள் ஏற்படும். நடத்தல் குனிந்து  நிமிர்த்தல் ஏறி இறங்குதல் போன்ற வேலைகளில் சுருங்கி விரிந்து நரம்புகளைத் தூண்டிவிடவும். உடலில் சோடியத்தைக் கட்டுப்படுத்தவும் பொட்டாசியம் சத்து தேவைப்படுகிறது. பொட்டாசியம் ஒரே சீராக கிடைக்க தினமும் ஒரு வாழைப்பழம் அவசியம் சாப்பிடவும்.download (2)

ஜப்பான் நாட்டில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் கொலு வைக்கிறார்கள். நவராத்ரி வைபவம் போன்ற இந்த விழாவை அங்கே ஹீனா மட்சூரி என்று அழைக்கிறார்கள். ஹூனா என்றால் பொம்மை மட்சூரி என்றால் திருவிழா. அங்கே கொலுவை 5 முதல் 7 படிகள் வரை வைத்துக் கொண்டாடுகிறார்கள். முதல் படியில் ராஜா ரானி போன்ற அரச பொம்மைகள் இரண்டாம் படியில் அரசவை பணிப்பெண் பொம்மைகள் மூன்றாம் படியில் இசைக் கலைஞர்கள் பொம்மைகள் நான்காம் படியில் அமைச்சர் பொம்மைகள் ஐந்தாம் படியில் பணியாளர்கள் பொம்மைகள் ஆறாம் படியில் மரச்சாமான்கள் விளையாட்டு பொம்மைகள் ஏழாம் படியில் பூக்கள் சம்மந்தப்பட்ட பொம்மைகள் என கொலு அமைக்கிறார்கள்.img11663623

அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் மேஜிக் ஸ்பாட் என்ற இடத்தில் புவிஈர்ப்பு விசை இல்லை. இங்கு உருண்டையான பொருட்களை வைத்தால் அவை சாய்வான பரப்பில் கீழிருந்து மேல் நோக்கி நகர்கிறது. உயரமானவர்கள் குள்ளமாகவும்  குள்ளமானவர்கள் உயரமாகவும் தெரிவார்கள். நடக்க முயற்சிக்கும்போது பூமி எதிர் திசையில் நம்மை இழுக்கும்.download

வட அமெரிக்காவில் மர முள்ளம்பன்றி என்னும் ஒரு விலங்கு இருக்கிறது. அது தன் ருசிக்கு ஏற்ற பட்டையுள்ள ஒரு மரத்தின் மேல் ஏறிக்கொள்ளூம். அந்த மரத்தின் கிளை குச்சி அடி மரம் என எல்லா இடங்களுலும் உள்ள பட்டைகலை முழுவதும் உரித்து தின்று முடித்த பிறகே வேறு மரத்துக்கே போகும். ஒரு மரத்தின் பட்டை முழுவதையும் தின்று முடிக்க சுமார் நாலு மாதங்கள் ஆகும்.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s