வேலையில் கவனக்குறைவு கூடாது

Lord

ஒரு சமயம் சிவபெருமான் பார்வதிதேவிக்கு ஆகமங்களை உபதேசித்தார்.  குழந்தைகளான வினாயகர் முருகனை நந்தியிடம் ஒப்படைத்து கவனித்துக்கொள்ள சொல்லிவிட்டார். தேவிக்கோ பாடத்தில் நாட்டமில்லாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். சிவபெருமான் கோபமடைந்து அவளை மீனவப் பெண்ணாக பிறக்கும்படி சாபமிட்டார்.2

இந்த நேரத்தில் வினாயகரும் முருகனும் அங்கே வந்தனர். தாயை சபித்த தந்தை மீது அவர்களுக்கு கோபம் ஏற்பட்டது. ஆகமச் சுவடிகளை கடலில் விட்டெறிந்தனர். மனைவியிடம் கோபித்தது போல பிள்ளைகளிடமும் கோபிக்க முடியுமா/  அதனால் கோபம் வேறு பக்கம் திரும்பியது.26kon8

அம்பாளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கும்போது பிள்ளைகளை பாட அறைக்குள் அனுமதித்த நந்தீஸ்வரரிடம் கொடுத்த வேலையைச் சரிவர செய்யாத நீ பாதுகாவலுக்கு தகுதியில்லாதவன் எனக்கூறி அவரை சுறாமீனாகப் பிறக்குமாறு சபித்தார்.  கடலுக்குள்  சுறாவாகத் திரிந்த நந்தீஸ்வரர் கடும் அட்டகாசம் செய்தார். மீனவர்கள் துன்பப்பட்டனர்.3

அதைப் பிடித்து தரும் மீனவனுக்கு தன் மகளை திருமணம் செய்து தருவதாக அறிவித்தார் மீனவர் தலைவர்.  சிவபெருமானே மீனவ இளைஞனாக வந்து சுறாவின் கொட்டத்தை அடக்கினார். தன் மீது பக்தி கொண்ட மீனவர் தலைவனுக்கு உண்மை வடிவில் காட்சி தந்து பார்வதியை மணந்தார். படிக்கும்போது வேடிக்கை பார்க்கக்கூடாது. வேலையில் கவனக்குறைவு கூடாது என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த திருவிளையாடல் நடந்தது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s