புண்ணியத்திற்கே புண்ணியம்

 

காலைக்கூட கீழே வைக்க அஞ்சி கைகளாலேயே ஊர்ந்து ஒரு தலத்துக்கு வந்தார் ஞானசம்பந்தர். அந்த அபூர்வ தலம் திருவாரூர் மாவட்டம் இடும்பாவனத்திலுள்ள சற்குணநாதர் கோவிலாகும்.

தல வரலாறுG_T5_294

முன்னொரு காலத்தில் பிரம்மனுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவரது சாத்வீக குணம் குறைந்தது. இதனால் வருந்திய பிரம்மா பூமியில் பல சிவத்தலங்களுக்கு சென்று  தன் குறை நீங்க வழிபாடு செய்தார். சிவன் இத்தலத்தில் நேரில் தோன்றி பிரம்மனுக்கு விமோசனம் அளித்தார். எனவே இவர் ‘ சத்குணநாதர் ‘ ஆனார். அதுவே சற்குணநாதர் என மாறியது.  மகிழ்ச்சியடைந்த பிரம்மா கோயில் எதிரில் பிரம்ம தீர்த்தம் உண்டாக்கினார்.

சிறப்பம்சம்thiruganasambandar

இடும்பன் என்ற அரக்கன் தனது பிறவிப்பணி  நீங்க இத்தலத்தில் இறைவனை வணங்கினான்.  இங்குதான் இடும்பியை திருமணம் செய்து கொண்டான். எனவே இத்தலத்தை இடும்பாவனம் என்பர். திருஞானசம்பந்தர் இங்கு வந்தபோது இத்தலத்திலுள்ள மணல் கூட சிவலிங்கமாக தெரியவே காலால் நடக்காமல் கைகளை ஊன்றி சிரமப்பட்டு ஊர்ந்து சன்னதிக்கு வந்தார். அந்தளவுக்கு புண்ணியமான தலம் இது.

திருமணத்தலம்download-619

அகத்தியருக்கு சிவன் திருமணக்காட்சி காட்டிய தலங்களில் இதுவும் ஒன்று. மூலவருக்கு பின்னால் சிவபார்வதி திருமணக்கோலம் உள்ளது. அகத்தியர் இத்தலத்தில் தங்கிய காலத்தில் பாவத்தால் அரக்க வடிவம் பெற்ற தேவாருமன் என்ற அந்தணனுக்கும் அவன் மனைவிக்கும் தன் கமண்டல நீரை தெளித்து சாப விமோசனம் பெற வழி காட்டினார்.

முன்னோருக்கு முக்தி

குணபரன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை இத்தலத்திற்கு கொண்டு வரும் போது தந்தையின் உருவம் அவன் முன் தோன்றியது. தன் மைந்தனை வாழ்த்தி முக்தி பெற்றது. எனவே இத்தலம் பிதுர் முக்தி தலமாக கருதப்படுகிறது. திருக்கடையூரில் மார்க்கண்டேயன் மீது பாசக்கயிறு வீசிய எமதர்மனுக்கு சாபம் ஏற்பட்டது. இத்தலத்தில் பூஜை செய்ததால் அது நீங்கியது. நோயுற்றவர்கள் சற்குணநாதரை வணங்கினால் மரணபயம் நீங்கும். கடல் நுரையால் ஆன சித்தி புத்தியுடன் கூடிய வெள்ளை வினாயகர் இங்கு அருள் புரிகிறார்.

கோவில் அமைப்புT_500_294

3 நிலை ராஜகோபுரம் உள்ளது. அம்மன் மங்கள நாயகி மாங்கல்ய வரம் தருபவளாக உள்ளாள். பிரகாரத்தில் வினாயகர் முருகன் சூரியன் அகத்தியர் இடும்பை சனி பகவான்  கஜலட்சுமி பைரவர் சந்திரன் லிங்கோத்பவர் துர்க்கை நடராஜர் சன்னதிகள் உள்ளன.

இருப்பிடம்   தஞ்சாவூரிலிருந்து திருத்துறைப்பூண்டி 70 கிமீ இங்கிருந்து தொண்டியக்காடு வழியாக புதுச்சேரி ரோட்டில் 28 கிமீ.

நான் எட்டாம் வகுப்பிலிருக்கும்போது கோடை

விடுமுறைக்காக என் அம்மாவழி பாட்டி வீட்டிற்கு சென்றபோது என் பாட்டியுடன் சென்று வழிபட்ட தலம்.  இந்தக் கதைகளையெல்லாம் என் பாட்டி என்னையும் என் மாமா பெண் ராதாவையும் அழைத்துச் சென்றபோது சொன்னவை இதனைப் படிக்கும்போது  நினைவுக்கு வந்தது.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s